28.3 C
Jaffna
April 5, 2025
Pagetamil
இலங்கை

முல்லைத்தீவில் ‘முதல் மரியாதை’ பாணி காதல்: 23 வயது காதலியை கடத்த முயன்ற 63 வயது காதலன்!

23 வயது பெண்ணும் 63 வயதான முதியவருக்கும் ஏற்பட்ட காதலால் பெரும் களேபரம் ஏற்பட்டுள்ளது. காதலியை கடத்த முயன்றார் என குறிப்பிடப்பட்டு, தாக்கப்பட்ட ஒருவரும், தாக்கிய இருவரும் முல்லைத்தீவு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியொன்றை சேர்ந்த 23 வயதான இளம் பெண்ணொருவருக்கு சில மாதங்களின் முன்னர் திருமணம் நடந்தது. எனினும், சிறிது காலத்தில், குடும்பத்திற்குள் தகராறு ஏற்பட்டது.

தனது 23 வயதான மனைவிக்கும், மனைவியின் நெருங்கிய உறவினரான 63 வயதான நபருக்குமிடையில் காதல் தொடர்பு இருப்பதாக கணவன், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். சுமார் ஒரு மாதத்தின் முன்பாக அவர் முறைப்பாடு செய்திருந்தார்.

கனடாவில் வசித்த அந்த முதியவர் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவின் பிறிதொரு பகுதியில் வசிப்பவர். கனடாவில் நீண்டகாலம் வசித்தவர், தற்போது முல்லைத்தீவில் வசிக்கிறார்.

பொலிசார் அந்த இளம்பெண்ணை அழைத்து விசாரித்த போது, 63 வயதான காதலனுடனேயே வாழப் போவதாக தெரிவித்தார்.

எனினும், பொலிசார் அந்த பெண்ணிற்கு அறிவுரை கூறினர். அத்துடன், பெற்றோர் அந்தப் பெண்ணை அழைத்துச் சென்றனர்.

கடந்த ஒரு மாதமாக வெளித்தொடர்புகள் இல்லாமல் அந்தப் பெண், வீட்டில் தங்க வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு அந்த பெண்ணை கடத்திச் செல்ல வந்ததாக குறிப்பிட்டு, வாகனமொன்றை சேதமாக்கிய பெண்ணின் உறவினர்கள், வாகன சாரதியையும் நையப்புடைத்தனர்.

கனடா வாசியின் ஏற்பாட்டில் பிறிதொருவர் வாகனத்தில் வந்து அந்த பெண்ணை ஏற்றிச் செல்ல முற்பட்டதாக, பெண்ணின் உறவினர்கள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

வாடகைக்கு பெறப்பட்ட வாகனமொன்றையே அந்த நபர் செலுத்தி வந்துள்ளார்.

தாக்குதலிற்குள்ளான வாகன சாரதியும், தாக்குதல் நடத்திய பெண்ணின் சகோதரர்கள் இருவரும் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

இதையும் படியுங்கள்

நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைக்கு வந்த யுவதிக்கு வைத்தியரால் பாலியல் துன்புறுத்தல்

Pagetamil

வாய் திறக்கவே அச்சப்படும் யாழ் ஜேவிபி எம்.பிக்கள்… மட்டக்களப்பு மக்கள் மீண்டும் நிராகரிப்பார்கள்: சாணக்கியன் எம்.பி

Pagetamil

வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி

Pagetamil

ஹர்ஷ இலுக்பிட்டியவின் பிணை மனு நிராகரிப்பு

Pagetamil

பூசா சிறையில் கைதி கொலை

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!