24.9 C
Jaffna
January 15, 2025
Pagetamil
உலகம் முக்கியச் செய்திகள்

ரஷ்யாவிற்கு ட்ரோன்களை விற்றதை முதல்முறையாக உறுதி செய்தது ஈரான்!

ஈரான் முதன்முறையாக ரஷ்யாவிற்கு ட்ரோன்களை விற்றதை உறுதிப்படுத்தியது, ஆனால் உக்ரைனில் போர் தொடங்குவதற்கு சில மாதங்களுக்கு முன் ட்ரோன்கள் விற்கப்பட்டதாகக் கூறியது.

சனிக்கிழமையன்று தெஹ்ரானில் நடந்த நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்டோல்லாஹியன், ஈரானிய ஆளில்லா விமானங்கள் ரஷ்யாவிற்கு அதன் படையெடுப்பிற்காக வழங்கப்பட்டதாகவும், மேலும் ஏவுகணைகளும் வழங்கப்படக்கூடும் என்றும் மேற்கத்திய நாடுகள் கூறுவதை நிராகரித்தார்.

“ஏவுகணைகள் குறித்த அவர்களின் கருத்துகள் முற்றிலும் தவறானவை, ட்ரோன் பகுதி சரியானது. உக்ரைனில் போருக்கு சில மாதங்கள் மற்றும் அதற்கு முன்பு நாங்கள் ரஷ்யாவிற்கு குறைந்த எண்ணிக்கையிலான ட்ரோன்களை வழங்கினோம், ”என்று அமிரப்டோல்லாஹியன் கூறினார்.

ஈரானிய அதிகாரிகள் முன்னர் பல சந்தர்ப்பங்களில் தெஹ்ரான் ரஷ்யாவுடன் “பாதுகாப்பு” ஒத்துழைப்பைக் கொண்டிருந்தது, ஆனால் “உக்ரேனில் போரில் பயன்படுத்தப்படும் நோக்கத்திற்காக” ரஷ்யாவிற்கு ஆயுதங்களை வழங்கவில்லை என்று கூறியுள்ளனர்.

ஈரான் போரில் இரு தரப்புக்கும் ஆதரவாக இல்லை என்றும் உக்ரைனுடன் பேசத் தயாராக இருப்பதாகவும் அமிரப்துல்லாஹியன் சனிக்கிழமை மீண்டும் வலியுறுத்தினார்.

“உக்ரைன் போரில் ஈரானிய ஆளில்லா விமானங்களை ரஷ்யா பயன்படுத்தியதற்கான ஆதாரம் இருந்தால், அவர்கள் அதை எங்களிடம் முன்வைக்க வேண்டும் என்று உக்ரைன் அதிகாரிகளிடம் நாங்கள் வலியுறுத்தியுள்ளோம்,” என்று அவர் கூறினார்.

ஈரானிய அரசியல் மற்றும் இராணுவ தூதுக்குழு இரண்டு வாரங்களுக்கு முன்பு பெயரிடப்படாத ஐரோப்பிய நாட்டிற்கு உக்ரேனிய சகாக்களுடன் ஒரு சந்திப்பை நடத்தச் சென்றது, ஆனால் அவர்கள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின்- குறிப்பாக ஜெர்மனியின்- அழுத்தத்தின் விளைவாக “11 வது மணிநேரத்தில்” கலந்து கொள்ள மறுத்துவிட்டனர் என்றார்.

வரும் நாட்களில் உக்ரைன் ஆதாரங்களை முன்வைக்கும் என்று ஈரான் இன்னும் எதிர்பார்க்கிறது என்றும், “ரஷ்யா உக்ரைன் போரில் ஈரானிய ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தியது எங்களுக்கு நிரூபிக்கப்பட்டால், நாங்கள் அதைப் பற்றி அலட்சியமாக இருக்க மாட்டோம்” என்றும் அமிரப்டோல்லாஹியன் கூறினார்.

போரில் பயன்படுத்திய ஆளில்லா வாகனங்கள் தமது நாட்டில் தயாரிக்கப்பட்டவை என்று கூறிய ரஷ்யா, உக்ரைனில் அதன் ட்ரோன்களைப் பயன்படுத்துவதை விசாரணை செய்வதற்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையை எச்சரித்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஜப்பானில் வாடகை நண்பர் – கோடிகளில் சம்பளம்

east tamil

இந்து மதம் மாறுகிறார் ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி லாரன் பாவல்?

Pagetamil

உயிருடன் சிக்கினால் தற்கொலை செய்யுங்கள் – கிம் ஜாங் உத்தரவால் அதிர்ச்சி

east tamil

இதுவரை 24 பேரை பலிகொண்ட லொஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீ – உருவானதும் பரவியதும் எப்படி?

Pagetamil

லொஸ் ஏஞ்சல் காட்டுத்தீயை கட்டுப்படுத்த சிறைக்கைதிகள் பங்கேற்பு

east tamil

Leave a Comment