திருகோணமலை, கிண்ணியாவில் கிணற்றில் தவறி விழுந்த 15 வயது சிறுவன் நேற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவன் கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவன் குளிப்பதற்குச் சென்ற பின்னர் கிணற்றில் விழுந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.
கிண்ணியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1