பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகி காயமடைந்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தின், வஜிராபாத்தில் உள்ள ஜாபர் அலி கான் சவுக் அருகே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பி.டி.ஐ) தலைவருமான இம்ரான் கானின் தலைமையில் நடந்த பேரணியில் நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார்.
Imran Khan was shot in the leg but was stable while being taken to hospital. He waived at supporters too. #عمران_خان_ہماری_ریڈ_لائن_ہے pic.twitter.com/XizoAQzPax
— PTI (@PTIofficial) November 3, 2022
இம்ரான் கான் இரு கால்களிலும் குண்டுகள் பாய்ந்ததை பஞ்சாப் சுகாதார அமைச்சர் யாஸ்மின் ரஷித் உறுதிப்படுத்தினார். முன்னாள் பிரதமர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார் என்றும் அவர் கூறினார்.
துப்பாக்கிச்சூடு நடத்தியவர் அந்த இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த தாக்குதலில் கட்சியின் மேலும் 3 பிரமுகர்களும் காயமடைந்தனர்.