டெஸ்போட் பகுதியில் மண்சரிவு

Date:

மலையகத்தில் தொடர் பெய்து வரும் மழையால் நேற்று மாலை நுவரெலியா – தலவாக்கலை பிரதான வீதியின் நானுஓயா- டெஸ்போட் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதனால் இவ்வீதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் நுவரெலியா, தலவாக்கலை மற்றும் மெராயா வழியூடான டயகமைக்கான போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டதுடன் தற்போது அந்த வீதியுடனான போக்குவரத்து ஒரு வழி போக்குவரத்தாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து இவ்வீதி ஓரங்களில் பல இடங்களில் மண்சரிவு ஏற்படுவதற்கான அபாயம் ஏற்பட்டுள்ளதால், அப்பாதையில் பயணிக்கும் வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் மிகுந்த அவதானத்துடன் பயணிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்