கிளிநொச்சி பொருளாதார மத்திய நிலையம் தொடர்பில் ஆராய அமைச்சர்கள் குழு கள விஜயம் ஒன்றை இன்று மேற்கொண்டனர்.
கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன், கரைச்சி பிரதேச செயலாளர் ஜெயகரன் உள்ளிட்ட பலர் கள விஜயத்தில் ஈடுபட்டனர்.
இதன் போது, கனகபுரம் பகுதியில் அமைந்துள்ள குறித்த பொருளாதார மத்திய நிலையத்தை பார்வையிட்டதுடன், வர்த்தகர்களுடன் கலந்துரையாடினர்.
தொடர்ந்து மாவட்ட செயலகத்தில் வர்த்தகர்களுடன் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1