Pagetamil
இந்தியா

படிக்கும் போதே இரட்டைக்குதிரையில் சவாரி செய்த இளம்பெண்: கொலை செய்த காதலன்!

ஒரே நேரத்தில் கணவனோடும், காதலனோடும் பழகி வந்த பெண் கொல்லப்பட்டுள்ளார்..

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே இந்த சம்பவம் நடந்நதது. 4மாத கர்ப்பிணியான பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்த முன்னாள் காதலனை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஈரோடு அடுத்துள்ள சித்தோடு ராயபாளையத்தைச் சேர்ந்த சென்னியப்பன்- வளர்மதி தம்பதியினரின் இளைய மகள் பிருந்தா கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாக கார்த்திக் என்பவருடன் திருமணம் ஆகி வாழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில் பிருந்தா தனது வீட்டில் இறந்து கிடப்பதாக வந்த தகவலை அடுத்து பெற்றோர்கள் பதறி துடித்தபடி சென்றனர்.

இதுபற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் பிருந்தாவின் உடலை கைப்பற்றி பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு கழுத்து நெரிக்கப்பட்டு பிருந்தா இறந்ததற்கான தடயங்கள் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தைச் சேர்ந்த அரவிந்த் என்பவனை கைது செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது போலீசாருக்கு அதிர்ச்சி தரும் தகவல்களை அரவிந்த் தெரிவித்துள்ளான்.

விசாரணையில், பிருந்தாவுக்கு கல்லூரியில் படிக்கும் போதே தற்போது கணவராக இருக்கும் கார்த்திக்குடன் காதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதே சமயத்தில் நத்தத்தைச் சேர்ந்த அரவிந்த் என்பவருடனும் பிருந்தாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கார்த்திக் மற்றும் அரவிந்த் ஆகிய இருவரையும் ஒரே சமயத்தில் பிருந்தா காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதில் முந்திக் கொண்ட கார்த்திக் பிருந்தாவை ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இந்த திருமண வாழ்க்கையில் நான்கு மாதம் கர்ப்பிணியாக தற்போது பிருந்தா இருந்து வந்துள்ளார்.

இதற்கிடையில் முன்னாள் காதலனான அரவிந்தை மறக்க முடியாமல் தவித்த பிருந்தா அவருடன் தொலைபேசியில் பேசி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பிருந்தாவை செல்போனில் தொடர்பு கொண்ட அரவிந்த் உன்னை பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளான்.

பிருந்தாவும் அனுமதி கொடுத்ததால் அவரது வீட்டிற்கு யாரும் இல்லாத நேரத்தில் அரவிந்த் சென்றுள்ளான்.

அப்போது உன்னை என்னால் மறக்க முடியவில்லை என்றும் வீட்டை விட்டு வெளியே வா நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் பிருந்தாவிடம் அரவிந்த் கூறியுள்ளான்.

அதற்குப் பிருந்தா தாம் இப்போது நான்கு மாத கர்ப்பிணியாக இருப்பதாகவும் தம்மால் வர முடியாது எனவும் மறுத்துள்ளார்.

அப்படி என்றால் இரண்டு பேரும் தற்கொலை செய்து கொள்ளலாம் என அரவிந்த் பிருந்தாவிடம் கூறியுள்ளான்.

அதற்கு தம்மை கொலை செய்து விட்டு நீயும் தற்கொலை செய்து கொள் என்று பிருந்தா கூறியுள்ளார்.

அப்போது இருவருக்கும் இடையே கடுமையாக தகராறு நடந்ததாக கூறப்படுகிறது.

இதில் ஏற்பட்ட ஆத்திரத்தில் அரவிந்த் பிருந்தாவின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு அங்கிருந்து சென்னைக்கு தப்பி சென்றது விசாரணை மூலம் தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து அரவிந்த்தை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சயிப் அலி கானை கத்தியால் குத்தியவர் கைது: சிக்கியது எப்படி?

Pagetamil

இந்திய தேர்தல் குறித்து மன்னிப்பு கோரிய மெட்டா நிறுவனம்!

east tamil

“கூத்தாடி என்ற கூற்றை உடைத்தவர் எம்ஜிஆர்” – தவெக தலைவர் விஜய் உருக்கம்

Pagetamil

புலிப்பூச்சாண்டி வேண்டாம்: பழ.நெடுமாறனின் விண்ணப்பத்தை பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவு!

Pagetamil

குடிபோதையில் மணமகனின் மோசமான செயல்

east tamil

Leave a Comment