நிலவும் கனமழை காரணமாக 8 மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் உள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பதுளை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தறை, மொனராகலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் இந்த அபாயம் நிலவுவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும், இந்த மாவட்டங்களில் வசிப்பவர்கள் மலைகள், சரிவான பகுதிகள் மற்றும் மண்சரிவு அபாயப் பகுதிகளாக அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் கவனமாக இருக்க வேண்டும் என்றும் கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1