25.1 C
Jaffna
January 18, 2025
Pagetamil
விளையாட்டு

ரி20 உலகக்கோப்பையில் அதிக ஓட்டம் குவித்தவர் விராட் கோலி!

ரி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த துடுப்பாட்ட வீரர் என்ற புதிய மைல்கல்லை எட்டியுள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கப்டன் விராட் கோலி.

பங்களாதேஷ் அணிக்கு எதிரான சூப்பர் 12 போட்டியில் அவர் இந்த மைல்கல்லை எட்டி இருந்தார். இதன்மூலம் இலங்கை அணியின் முன்னாள் வீரர் மஹேல ஜெயவர்த்தன வசம் இருந்த சாதனையை அவர் தகர்த்துள்ளார்.

இந்தப் போட்டியில் 16 ரன்களை எடுத்தபோது 1016 ரன்களை எடுத்திருந்த ஜெயவர்த்தனவை கடந்தார். அதன்மூலம் அதிக ரன்கள் குவித்த துடுப்பாட்ட வீரர் ஆனார்.

ரி20 உலகக் கோப்பையில் அதிக அரைசதம் விளாசிய வீரரும் அவர்தான். மொத்தம் 13 அரை சதங்களைப் பதிவு செய்துள்ளார். அவர் விளையாடும் 5வது ரி20 உலகக் கோப்பை தொடர் இது. இதில் அவரது அதிகபட்ச ரன்கள் 89 (நொட்-அவுட்).

23 இன்னிங்ஸ்களில் விளையாடி மொத்தம் 1065 ரன்களை அவர் குவித்துள்ளார். நடப்பு ரி20 உலகக் கோப்பையில் 3 அரைசதங்களுடன் 220 ரன்களை குவித்துள்ளார். 19 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் இதில் அடங்கும்.

ரி20 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்த துடுப்பாட்ட வீரர்கள்

விராட் கோலி | இந்தியா – 1065 ரன்கள்: 23 இன்னிங்ஸ்
மஹேல ஜெயவர்த்தன | இலங்கை – 1016 ரன்கள்: 31 இன்னிங்ஸ்
கிறிஸ் கெயில் | மேற்கிந்திய தீவுகள் – 965 ரன்கள்: 33 இன்னிங்ஸ்
ரோகித் சர்மா | இந்தியா – 904 ரன்கள்: 35 இன்னிங்ஸ்
திலகரட்ன டில்ஷன் | இலங்கை – 897 ரன்கள்: 35 இன்னிங்ஸ்

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

என் மகளுக்கு நிச்சயதார்த்தம் நடக்கவில்லை!

Pagetamil

`இளம் எம்.பி -யைக் கரம் பிடிக்கும் ரிங்கு சிங்’; யார் இந்த பிரியா சரோஜ்?

Pagetamil

‘உங்களை விட என் மகன் சிறந்த வீரர்’ – கபில் தேவுக்கு ‘பேப்பர் கட்டிங்’ அனுப்பிய யோக்ராஜ் சிங்

Pagetamil

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து நியூஸிலாந்தின் மார்டின் கப்தில் ஓய்வு!

Pagetamil

தீர்ந்தது 10 ஆண்டு தாகம்: அவுஸ்திரேலியா வசமானது போர்டர் – கவாஸ்கர் டிராபி!

Pagetamil

Leave a Comment