Pagetamil
சினிமா

பேய்ப்படத்தில் லொஸ்லியா!

‘சிஎஸ்கே’ படத்தை இயக்கிய எஸ்.சத்தியமுர்த்தி, அடுத்து ஹாரர் படத்தை இயக்குகிறார். ஆக்செஸ் ஃபிலிம் ஃபேக்டரி ஜி.டில்லி பாபு வழங்கும் இந்தப் படத்தில், முனிஷ்காந்த், பூர்ணேஷ், லொஸ்லியா, அவந்திகா, ஷாஷ்வி உட்பட பலர் நடிக்கின்றனர்.

இன்னும் பெயரிடப்படாத இதன் பூஜை திங்கட்கிழமை நடந்தது.

படம்பற்றி இயக்குநர் எஸ்.சத்தியமுர்த்தி கூறியதாவது: இது, சஸ்பென்ஸ்- ஹாரர் த்ரில்லர் படம். பேய் படம்என்றாலும் வழக்கமானதாக இருக்காது. இதில் முதல் முறையாக ‘பயோனிக் ஹேண்ட்’ என்ற முறையை பயன்படுத்தப் போகிறோம். அதாவது செயற்கை கை. அந்தக் கை படத்தில் என்னவிதமான பிரச்னையை ஏற்படுத்துகிறது என்பதுதான் படம். சீரியஸான பேய் படமாக உருவாகும் இதன் திரைக்கதையில், திருப்பங்கள் இருக்கும். படத்துக்காக 20, 25 வருட பழமையான பாழடைந்த மருத்துவமனை தேவைப்பட்டது. விமான நிலையம் அருகே ஒரு கட்டிடத்தை அப்படி மாற்றி இருக்கிறோம். இந்தக் கட்டிடமே பயத்தை ஏற்படுத்துவதுபோல இருக்கும். இவ்வாறு கூறினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பாலையாவுடன் நடன சர்ச்சை: ஊர்வசி ரவுதெலா விளக்கம்

Pagetamil

பிரபல நடிகர் சயிப் அலிகான் மீது வீடு புகுந்து தாக்குதல்

east tamil

‘பகவந்த் கேசரி’ ரீமேக்தான் ‘விஜய் 69’ – உடைந்த ரகசியம்

Pagetamil

விபத்தில் சிக்கிய அஜித்தின் நலம் குறித்து ஆர்வம் காட்டிய அருண் விஜய்

east tamil

‘த கோட்’ படத்தால் மன அழுத்தம்: நடிகை மீனாட்சி சவுத்ரி வருத்தம்

Pagetamil

Leave a Comment