25 C
Jaffna
January 19, 2025
Pagetamil
உலகம்

தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தில் மீண்டும் இணைந்தது ரஷ்யா!

கருங்கடல் வழியாக தானியங்களை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கும் ஒப்பந்தத்தில் மீள பங்கேற்பதாக ரஷ்யா புதன்கிழமை அறிவித்துள்ளது.

கருங்கடலிலுள்ள தனது கடற்படை தளத்தை உக்ரைனிய ட்ரோன்கள் தாக்கியதற்கு பதிலடியாக, ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக 4 நாட்களின் முன் ரஷ்யா அறிவித்திருந்தது.

கருங்கடலைக் கடக்கும் சிவிலியன் கப்பல்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என்று கூறியது.

“தற்போது பெறப்பட்ட உத்தரவாதங்கள் போதுமானதாக இருப்பதாக ரஷ்ய கூட்டமைப்பு கருதுகிறது, மேலும் ஒப்பந்தத்தை மீண்டும் செயல்படுத்துகிறது” என்று பாதுகாப்பு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

செவ்வாயன்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கும் துருக்கிய ஜனாதிபதி தையிப் எர்டோகனுக்கும் இடையிலான தொலைபேசி அழைப்பைத் தொடர்ந்து இந்த மாற்றம் ஏற்பட்டதுஃ

இரு தலைவர்களின் உரையாடலை தொடர்ந்து, இரு நாட்டு பாதுகாப்பு அமைச்சர்களுக்கு இடையில் மீண்டும் மீண்டும் உரையாடல்கள் நடந்தன.

“ஐக்கிய நாடுகள் சபை மற்றும் துருக்கியின் ஈடுபாட்டிற்கு நன்றி, ரஷ்யாவிற்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள மனிதாபிமான தாழ்வாரம் மற்றும் உக்ரைனிய துறைமுகங்களைப் பயன்படுத்த மாட்டோம் என்று உக்ரைனிடமிருந்து எழுத்துப்பூர்வ உத்தரவாதத்தைப் பெற முடிந்தது“ என்று அமைச்சகம் கூறியது.

ஜூலையில் துருக்கிய மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மத்தியஸ்தத்தில் கைச்சாத்தானது.

உக்ரைன் ட்ரோன் தாக்குதலை தொடர்ந்து, மனிதாபிமான தாழ்வாரத்தின் வழியாக கப்பல்கள் தொடர்ந்து பயணிப்பது ஆபத்தானது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று ரஷ்யா முன்னர் கூறியது.

ரஷ்யாவின் அறிவிப்பு வெளியான போதிலும், கப்பல்கள் உக்ரைனிய தானியங்களை ஏற்றிக்கொண்டு சென்றன. மேலும் ஒரே நாளில் அதிக தானியம் ஏற்றிச் செல்லப்பட்ட சாதனை திங்களன்று பதிவானது.

ரஷ்ய அரசியல் ஆய்வாளர் டாட்டியானா ஸ்டானோவாயா புதன்கிழமை அறிவிப்பு புடின் ஏற்றுமதிகளைத் தடுக்க முடியாது என்று ஒப்புக்கொண்டதைக் குறிக்கிறது என்றார்.

“கிரெம்ளின் ஒரு வலையில் விழுந்தது, அதில் இருந்து எப்படி வெளியேறுவது என்று தெரியவில்லை,” என்று அவர் கூறினார்.

“மோசமான ஆட்டத்தை எதிர்கொள்ளும் போது பின்வாங்கி நல்ல முகத்தை (மிகவும் வெற்றிகரமாக இல்லை) அணிவது அவசியம். அதாவது, புடின், உக்ரைனில் எவ்வளவு ஆர்வமாக இருந்தாலும், அவரது வரலாற்று நோக்கம் மற்றும் அவர் சொல்வது சரிதான் என்ற நம்பிக்கை, தேவைப்பட்டால் பின்வாங்கத் தெரிந்த மிதமான பகுத்தறிவு அரசியல்வாதியாகவே இருக்கிறார் என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

படகு கவிழ்ந்து 40 பாகிஸ்தானியர்கள் பலி

east tamil

அமெரிக்காவில் டிக்டொக் செயலிக்குத் தடை

east tamil

உலகத் தமிழர் மாநாடு வியட்நாமில்!

east tamil

ஈரான் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேல் திட்டங்களை கசிய விட்ட சிஐஏ ஊழியர் கைது!

Pagetamil

இம்ரான் கானுக்கு 14 வருட சிறைத்தண்டனை

Pagetamil

Leave a Comment