26.8 C
Jaffna
December 15, 2024
Pagetamil
விளையாட்டு

FIFA உலகக் கோப்பை 2022: கட்டாரின் பிரமிக்க வைக்கும் 8 அரங்கங்களின் விபரம்!

உலகத்தின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலகக்கிண்ண கால்ப்பந்தாட்டத் தொடர் இன்னும் மூன்று வாரங்களில் கட்டாரில் ஆரம்பிக்கவுள்ளது.

உலகக்கிண்ண கால்ப்பந்தாட்ட தொடர் மத்திய கிழக்கில் முதன்முறையாக நடக்கவுள்ளது. இதனால் கட்டார் மிகப்பிரமாண்டமாக தொடரை நடத்த திட்டமிட்டு வருகிறது.

ஒரு மாதம் நடக்கவுள்ள இந்த கால்ப்பந்தாட்ட திருவிழா, மொத்தம் 8 மைதானங்களில் நடக்கவுள்ளது.

லுசைல் அரங்கம், அரங்கம் 974, அல் துமாமா அரங்கம், அல் பேட் அரங்கம், கலீஃபா சர்வதேச அரங்கம், அஹ்மத் பின் அலி அரங்கம், எடிஜுகேஷன் சிட்டி அரங்கம் மற்றும் அல் ஜானூப் அரங்கம் ஆகியவற்றில் போட்டிகள் நடக்கவுள்ளன. இதற்காக பல ஆண்டுகளாக மைதானங்கள் தயார்படுத்தப்பட்டு வருகின்றன.

அனைத்து அரங்குகளும் அரபு பாரம்பரியத்தின் தனித்துவமான அம்சங்களை பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

போட்டிகள் நடக்கும் ஒவ்வொரு அரங்கங்களை பற்றிய விபரங்கள் வருமாறு-

லுசைல் அரங்கம்

80,000 பேர் அமர்ந்து போட்டியை ரசிக்கக்கூடிய லுசைல் அரங்கம் கட்டாரிலேயே மிகப்பெரியது. 2022 உலகக் கோப்பை இறுதிப் போட்டி இங்கேதான் நடக்கும்.

போட்டியின் இணையதளத்தின்படி, பாரம்பரிய ஃபனர் விளக்குகளில் காணப்படும் ஒளி மற்றும் நிழல்களின் நடனத்தைச் சுற்றி மைதானம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கம் அரேபிய உலகின் வளமான பிரதிநிதித்துவமாக வடிவமைக்கப்பட்டுள்ளது, இப்பகுதியில் இருந்து கப்பல்கள், கிண்ணங்கள் மற்றும் கலைத் துண்டுகள் ஆகியவற்றைக் காட்சிப்படுத்துகிறது. இறுதிப் போட்டிக்கு மேலதிகமாக, லுசைல் ஸ்டேடியம் ஆறு குழுப் போட்டிகள் மற்றும் ஒரு அரையிறுதி உட்பட மூன்று நொக்-அவுட் சுற்றுப் போட்டிகளையும் நடத்தும்.

இந்த மைதானம் டோஹா நகர மையத்திலிருந்து வடக்கே 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. புதிய லுசைல் பெருநகரத்தின் மையப்பகுதியாக உள்ளது.

போட்டிகள் முடிவடைந்த பிறகு, லுசைல் மைதானம் பள்ளிகள், கடைகள், விளையாட்டு வசதிகள் மற்றும் சுகாதார கிளினிக்குகள் உள்ளிட்ட சமூக இடமாக மாற்றப்பட உள்ளது. மேலும், மைதானத்தின் 80,000 இருக்கைகளில் பெரும்பாலானவை அகற்றப்பட்டு விளையாட்டுத் திட்டங்களுக்கு நன்கொடையாக வழங்கப்படுகின்றன.

எடிஜுகேஷன் சிட்டி அரங்கம்

பாரம்பரிய இஸ்லாமிய கட்டிடக்கலையின் வடிவங்களை பிரதிபலிக்கும் இந்த அரங்கத்தில் 40,000 இருக்கைகள் உள்ளன. இந்த அரங்கத்தை சூழ பல முன்னணி பல்கலைக்கழகங்கள் அமைந்துள்ளன.

அதன் தனித்துவமான குளிரூட்டும் அமைப்பிலிருந்து அதைச் சுற்றியுள்ள பசுமையான இடங்கள் வரை, அரங்கம் நிலைத்தன்மை மற்றும் எதிர்காலத்தை மனதில் கொண்டு கட்டப்பட்டது.

வைர வடிவ அரங்கத்தின் ஆரம்ப கொள்ளளவு 40,000 இருக்கைகளாக இருக்கும். போட்டியின் முடிவில் 25,000 இருக்கைகளாகக் குறைக்கப்படும். வளரும் நாடுகளுக்கு கூடுதல் இருக்கைகள் நன்கொடையாக வழங்கப்படும்.

அஹ்மத் பின் அலி அரங்கம்

40,000 பார்வையாளர்கள் போட்டியை ரசிக்கக்கூடிய இந்த அரங்கம் மற்றும் சுற்றியுள்ள கட்டிடங்கள் உள்ளூர் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் அம்சங்களை பிரதிபலிக்கும் வகையில்  ஒரு தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது.

சிக்கலான முகப்பில் மணல் திட்டுகளின் அலைகளை பிரதிபலிக்கிறது, அதே சமயம் சிக்கலான வடிவங்கள் பாலைவனத்தின் அழகு, பூர்வீக தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் மற்றும் உள்ளூர் மற்றும் சர்வதேச வர்த்தகத்தை பிரதிபலிக்கின்றன. போட்டி முடியும் போது அது கத்தாரின் அல்-ரய்யான்ஸ் விளையாட்டுக் கழகத்தின் இல்லமாக இருக்கும்.

கட்டுமானப் பொருட்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமானவை, முன்பு அந்த இடத்திலிருந்த அசல் அரங்கத்திலிருந்து பெறப்பட்டவை. அதே சமயம் இருக்கும் மரங்களும் கவனமாகத் தக்கவைக்கப்பட்டன. ரசிகர்கள் வருகையின் போது, ​​சுற்றுச்சூழலுக்கு உகந்த புதிய டோஹா மெட்ரோ அமைப்பு மூலம் பயணிக்க முடியும்.

போட்டிக்குப் பிறகு, மைதானத்தின் இருக்கைகளில் பாதி வெளிநாட்டில் கால்பந்து மேம்பாட்டுத் திட்டங்களுக்கு வழங்கப்படும்.

அல் துமாமா அரங்கம்

முஸ்லிம் ஆண்கள் தலையில் அணியும் பாரம்பரிய நெய்யப்பட்ட தொப்பியான காஃபியாவை போன்ற இந்த இந்த அரங்கம் 40,000  கொள் திறன் கொண்டது. FIFA உலகக் கிண்ணத் தொடருக்காக புதிதாக கட்டப்பட்டது.கால் இறுதி கட்டம் வரை பல போட்டிகள் இங்கு நடக்கும்.

ஒவ்வொரு மைதானத்திலும் உள்ளது போல், மைதானத்தின் உள்ளே உகந்த சூழலைப் பராமரிக்க, குளிரூட்டப்பட்ட வென்ட்கள் மைதானம் முழுவதும் வைக்கப்பட்டுள்ளன.

நிகழ்வுகள் நிறைவடையும் போது, அரங்கத்தின் திறன் 20,000 இருக்கைகளாகக் குறைக்கப்படும். வளரும் நாடுகளுக்கு கூடுதல் இருக்கைகள் பரிசளிக்கப்படும், இது கத்தார் மக்களின் தாராள மனப்பான்மையின் பிரதிபலிப்பாகும் என கட்டார் கூறுகிறது.

அரங்கத்தின் மேல் இருக்கைக்கு பதிலாக ஒரு பூட்டிக் ஹோட்டல் அமைக்கப்படும். அத்துடன், உலகப் புகழ்பெற்ற ஆஸ்பெட்டர் ஸ்போர்ட்ஸ் கிளினிக்கின் கிளை சேர்க்கப்படும். எனவே உலகக் கோப்பை முடிந்த பிறகும் இந்த மைதானம் சமூகத்திற்கு தொடர்ந்து சேவை செய்யும்.

அரங்கம் 974

வணிக வளாகங்களின் மாதிரியில் கட்டப்பட்ட இந்த அரங்கத்தில் 40,000 பார்வையாளர்கள் உட்காரலாம். 974 என்ற எண் கட்டாருக்கான சர்வதேச டயலிங் குறியீட்டைக் குறிக்கிறது.

அத்துடன், இந்த அரங்கத்தின் கட்டுமானத்திற்கு 974 கப்பல் கொள்களன்களில் பொருட்கள் கொண்டு வரப்பட்டிருந்தன.

இது ஒரு தற்காலிக அரங்காகும். IFA உலகக் கோப்பை வரலாற்றில் இது “முழுமையாக நீக்கக்கூடிய முதலாவது அரங்கம்” என்ற பெருமைக்கும் உரியது.

மேலும் பாரம்பரிய மைதானங்களைக் காட்டிலும் குறைவான பொருட்களைப் பயன்படுத்தி, எதிர்கால கட்டுமானத்துறையின் முன்னோடியாக அமைந்துள்ளது.

அல் பேட் அரங்கம்

முத்துக்குளித்தல் மற்றும் மீன்பிடித்தலுக்குப் புகழ்பெற்ற அல் கோர் நகரில் அமைந்துள்ள அல் பைட் அரங்கம், கட்டாரின் நாடோடி மக்கள் வரலாற்று ரீதியாகப் பயன்படுத்திய கூடாரங்களான பேத் அல் ஷார்வைப் பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 60,000 திறன் கொண்ட அரங்கில் உள்ளிழுக்கும் கூரை அமைப்பு மற்றும் மேம்பட்ட குளிரூட்டும் அமைப்புகள் உள்ளன. எனவே, ரசிகர்கள் வசதியாக போட்டிகளைப் பார்க்க முடியும்.

2022 FIFA உலகக் கோப்பை தொடரின் தொடக்கப் போட்டி, ஐந்து குழுப் போட்டிகள், அரையிறுதிப் போட்டிகளில் ஒன்று உட்பட சில நொக்-அவுட் போட்டிகளும் இங்கு நடக்கும்.

அரங்கின் இருக்கைகளில் ஏறக்குறைய பாதியை அகற்றி, உலகெங்கிலும் உள்ள கால்பந்து திட்டங்களில் பயன்படுத்த முடியும்.

அல் ஜனோப் அரங்கம்

கட்டாரின் பண்டைய மக்கள் வசித்த அல் வக்ரா பகுதியில் கடற் பயணங்களும் இடம்பெற்றன. அதனை நினைவூட்டும் வகையில் பாரம்பரிய தோவ் படகுகளின் வடிவமைப்பை ஒத்ததாக இந்த அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 40,000 இருக்கைத் திறன் உள்ளது.

கூரையானது ஒரு கப்பலின் மேற்பகுதியை ஒத்ததாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு புதுமையான குளிரூட்டும் அமைப்புபை கொண்டது. உள்ளிழுக்கக்கூடிய கூரை அமைப்பை கொண்டது.

டோஹா மெட்ரோவின் ரெட் லைனில் உள்ள அல் வக்ரா நிலையம் ஊடாக இங்கு பயணிக்கலாம்.

போட்டிக்குப் பிறகு மைதானத்தின் திறன் 40,000 இலிருந்து 20,000 ஆகக் குறைக்கப்படும், அதிகப்படியான இருக்கைகள் – மேல் அடுக்கில் இருந்து – வெளிநாடுகளில் கால்பந்து மேம்பாட்டுத் திட்டங்களுக்கு நன்கொடையாக வழங்கப்படும்.

கலீஃபா சர்வதேச அரங்கம்

1976 ஆம் ஆண்டு கட்டப்பட்ட கலீஃபா சர்வதேச அரங்கத்தில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள், அரேபிய வளைகுடாக் கோப்பை மற்றும் ஆசியக் கோப்பை ஆகியவை நடைபெற்றுள்ளன. 2019 ஆம் ஆண்டில், FIFA கிளப் உலகக் கோப்பை  போட்டிகளுடன், IAAF உலக தடகள சாம்பியன்ஷிப்யும் இங்கு நடத்தப்பட்டுள்ளது.

FIFA 2022 உலகக் கோப்பை போட்டிகளிற்கு தயார் செய்வதற்காக இந்த மைதானம்  விரிவாக மறுவடிவமைக்கப்பட்டது. உலகளாவிய நிலைத்தன்மை மதிப்பீட்டு அமைப்பு (GSAS) சான்றிதழைப் பெற்ற முதல் FIFA உலகக் கோப்பை கட்டார் 2022 அரங்கம் இதுவாகும்.

அரங்கத்தின் இரட்டை வளைவுகள் மறுவடிவமைப்பைத் தொடர்ந்தும் அப்படியே இருந்தன. இப்போது புதிய குளிரூட்டும் முறைமையின்  கீழ், ஒரு பரந்த விதானம் அமைக்கப்பட்டுள்ளது.

40,000 இருக்கைத் திறன் கொண்ட இந்த அரங்கம் இப்போது புதிய முகப்பைக் கொண்டுள்ளது. புதிய LED விளக்கு அமைப்பு ரசிகர் அனுபவத்திற்கு புதிய பரிமாணத்தை சேர்க்கிறது.

டோஹா மெட்ரோ கோல்ட் லைனில் உள்ள ஸ்போர்ட் சிட்டி ஸ்டேஷன் மூலம் இந்த மைதானத்திற்கு பயணிக்கலாம்..

இந்த அரங்கம் பல்வேறு விளையாட்டுகளில் பங்கேற்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வழக்கமான ஃபோர்முக்கு திரும்பியது இலங்கை: வெறும் 42 ஓட்டங்களில் சுருண்டது!

Pagetamil

“ஒரு நல்ல மனிதனாக நினைவில் நிற்க விரும்புகிறேன்”: டென்னிஸில் இருந்து ஓய்வை அறிவித்த ரஃபேல் நடால் நெகிழ்ச்சி!

Pagetamil

‘விடை பெறுகிறேன்!’ – ஓய்வை அறிவித்த நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் டிம் சௌத்தி

Pagetamil

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அல்ஜீரியாவின் இமானே கெலிஃப் ஆண்: மருத்துவ அறிக்கையில் உறுதி

Pagetamil

ஐபிஎல் 2025: தக்கவைக்கப்பட்ட வீரர்கள் பட்டியல்!

Pagetamil

Leave a Comment