நடிகர் சித்தார்த்- நடிகை அதிதி ராவ் காதல் உறுதியாகியுளள்து.
ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படம் மூலம் அறிமுகமாகி முன்னணி கதாநாயகனாக உயர்ந்து சித்தார்த்துடன் ஏற்கனவே சில நடிகைகளை இணைத்து கிசுகிசுக்கள் வெளியாகி அடங்கியது.
சமீப காலமாக நடிகை அதிதி ராவ் ஹைதரியுடன் சித்தார்த் காதலில் இருப்பதாக தகவல் பரவியது.
இருவரும் விழாக்கள், பொது நிகழ்ச்சிகளில் ஜோடியாகவே பங்கேற்றனர். மும்பை தெருக்களில் நெருக்கமாக கைகோர்த்தபடி சுற்றிய புகைப்படங்களும் வெளியானது. இருவரும் ஒரே வீட்டில் வசிப்பதாக கூட செய்தி வெளியாகியிருந்தது.
இருவரும் காதலிப்பதாக பலரும் பேசினர். ஆனாலும் இதுகுறித்து எந்த விளக்கத்தையும் அவர்கள் அளிக்காமல் இருந்தனர்.
இந்த நிலையில் அதிதிராவ் ஹைதரி பிறந்த நாளையொட்டி அவருக்கு சித்தார்த் வாழ்த்து தெரிவித்து காதலிப்பது உண்மைதான் என்பதை உறுதிப்படுத்தி இருப்பதாக சமூக வலைதளத்தில் தகவல் பரவி உள்ளது.
சித்தார்த் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ”என் இதய ராஜகுமாரிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்” என்று குறிப்பிட்டு உள்ளார். அதோடு தனது நெஞ்சில் அதிதிராவ் சாய்ந்தபடி இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
இருவரும் மகா சமுத்திரம் என்ற தெலுங்கு படத்தில் இணைந்து நடித்தனர். அப்போது காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. அதிதிராவ் ஹைதரி தமிழில் செக்கசிவந்த வானம், சைக்கோ, ஹேய் சினாமிகா ஆகிய படங்களில் நடித்து இருக்கிறார்.