தென் கொரியாவின் சியோலில் சனிக்கிழமை இரவு ஹலோவீன் பண்டிகையின் போது நெரிசலில் சிக்கி இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (SLBFE) பிரதிப் பொது முகாமையாளரும் பேச்சாளருமான காமினி செனரத் யாப்பா உறுதிப்படுத்தியுள்ளார்.
உயிரிழந்தவர் கண்டியைச் சேர்ந்த 27 வயதான மொஹமட் ஜினாஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
“அவர் பணியகத்தில் பதிவு செய்யப்படவில்லை. அவர் E-9 விசா பிரிவின் கீழ் சியோலுக்குச் செல்லவில்லை, இது புலம்பெயர்ந்த தொழிலாளர்களை நாங்கள் அனுப்பும் வகையாகும். எனவே, அவர் வேலைக்காக சியோலில் இருந்தாரா என்பதை நாங்கள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை, ”என்று அவர் கூறினார்.
இறந்தவர்களில் அல்லது காயமடைந்தவர்களில் மேலும் இலங்கையர்கள் எவரும் இருப்பதாகத் தகவல் இல்லை என்ற அவர், தென் கொரியாவில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் அதிகாரிகளிடமிருந்து கூடுதல் விவரங்களை எதிர்பார்க்கிறோம் என்று கூறினார்.