25.6 C
Jaffna
January 10, 2025
Pagetamil
கிழக்கு

தேசிய இளைஞர் சேவைகள் மன்ற விவகாரம்: ஆர்ப்பாட்டத்திற்கு முஸ்தீபு

சாய்ந்தமருதில் இயங்கிவரும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண அலுவலகம் இதுவரை எந்தவிதமான பாகுபாடுகளுமற்ற வகையில் கிழக்கின் மூன்று மாவட்டங்களையும் உள்ளடக்கியதாக சிறப்பாகச் செயற்பட்டுவரும் நிலையில் இப்பிராந்தியத்தில் இனங்களிடையே பிரிவினையையும்இ இளைஞர்களிடையே ஒறுறுமையையும் சிதைக்கும் வகையில் அம்பாறையிலுள்ள ஒருசில சிங்கள உத்தியோகத்தர்களின் தனிப்பட்ட தேவைகளுக்காக சாய்ந்தமருதிலுள்ள இவ் அலுவலகத்தை மீண்டும் அம்பாறைக்கு கொண்டு செல்ல வேண்டும் என பல முறை முயற்சித்து வந்துள்ளனர் என்பதுடன் எப்படியாவது அதனை கொண்டு செல்லவே வேண்டும் என்ற முனைப்பிலேயே தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர் என யூத் அலையன்ஸ் ஶ்ரீ-லங்கா இளைஞர் அமைப்பின் தலைவரும் முன்னால் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினருமான இஷட்.எம் ஸாஜீத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சாய்ந்தமருது மற்றும் கல்முனை உள்ளிட்ட பிரதேசங்களில் கடந்த காலங்களில் நிலவிய கொரோனா சூழ்நிலையை அடுத்து போக்குவரத்து நடவடிக்கைகள் தடைப்பட்டதால் சாய்ந்தமருதிலுள்ள மாகாண அலுவலகத்தின் கணக்கு பிரிவின் நடவடிக்கைகளை உடனுக்குடன் செய்வதில் சில தடங்கல்கள் ஏற்பட்டன. இதனால் தற்காலிக அடிப்படையில் நிலமை சீராகும் வரை சில ஆவணங்களை மட்டும் அம்பாறையிலுள்ள மாவட்ட அலுவலகத்திலுள்ள ஒரு புறம்பான இடத்தில் வைத்து கடமையாற்றுவதெனவும், ஏனைய பிரிவுகளை வழமைபோன்று சாய்ந்தமருது அலுவலகத்திலேயே ஆற்றுவதெனவும் மாகாணப் பணிப்பாளரினால் தீர்மானிக்கப்பட்டு அதற்காக இரு சிங்கள உத்தியோகத்தர்களும் தற்காலிகமாக விடுவிக்கப்பட்டனர்.

தற்பொழுது நிலைமைகள் முற்றாக சீரடைந்துள்ள நிலையில் தற்காலிகம் என்ற பெயரில் அம்பாறையிலுள்ள தே.இ.சே.மன்றத்தின் மாவட்ட அலுவலகத்திலுள்ள ஒரு இடவசதியற்ற அறைக்குள் கொண்டு செல்லப்பட்ட இக் கணக்குப் பிரிவு மீண்டும் சாய்ந்தமருதிலுள்ள அதன் பிரதான அலுவலகத்திற்கு கொண்டுவரப்படாமல் அம்பாறையிலேயே தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது. இதனை அங்கேயே நிரந்தரமாக வைத்திருப்பதற்கு உத்தேசித்துள்ளதாகவும் இதனை சாட்டாக வைத்து எதிர்காலத்தில் சாய்ந்தமருதிலுள்ள அலுவலகத்தை கொஞ்சம் கொஞ்சமாக கொண்டு செல்வதற்கு சந்தர்ப்பம் பார்த்திருப்பதாகவும் அறியப்படுகிறது. இது தொடர்பாக இதுவரை எந்த முறைப்பாடுகளும் நமது தரப்பிலிருந்து கொடுக்கப்படாததை அவர்கள் சாதகமாகப் பயன்படுத்துகின்றனர். அம்பாறைக்கு தற்காலிகமாகக் கொண்டு செல்லப்பட்ட கணக்குப் பிரிவினை மீண்டும் சாய்ந்தமருதிலுள்ள உத்தியோகபூர்வ மாகாண அலுவலகத்திற்கு எடுத்து வராமல் அங்கேயே நிரந்தரமாக நடை முறைப்படுத்துவதற்கும், சாய்ந்தமருதிலுள்ள அலுவலகத்தின் ஏனைய பொருட்களையும் அம்பாறைக்கு கொண்டுசெல்வதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைமை அலுவலகத்திலுள்ள சில உயரதிகாரிகளின் ஒத்துழைப்பும் பெறப்படுகிறது.

அத்துடன் மகரகமவிலுள்ள தலைமை அலுவலகத்திலிருந்து மாகாணப் பணிப்பாளருக்கான மேசை கதிரை என்பன அம்பாறைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் நம்பகமாகத் தெரிய வந்துள்ளது.

இதற்கிடையில் கணக்குப் பிரிவின் நடவடிக்கைகளை அம்பாறையில் வைத்து மேற்கொள்ளுமாறு மன்றத்தின் தலைவர் ஊடாகவோ அல்லது இளைஞர் விவகார அமைச்சர் அல்லது பிரதமர் உள்ளிட்ட தலைவர்களாலோ எந்தவிதமான உத்தியோகபூர்வ கட்டளைகளும் பிறப்பிக்கப்படவில்லை. இவ்விடயங்கள் அவர்களுக்கு தெரிந்திருக்கவும் நியாயமில்லை.

இது மாகாணப் பணிப்பாளர் உள்ளிட்ட அம்பாறையிலுள்ள சில சிங்கள உத்தியோகத்தர்களின் தனிப்பட்ட விருப்பம் மற்றும் தூண்டுதலின் பேரிலேயே இடம்பெற்றுள்ளதாகவும் அறிய முடிகிறது.

அத்துடன் முதல் ஒரு தடவை சாய்நதமருதிலுள்ள இவ் அலுவலகத்தை அம்மாறைக்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட வேளையில் கௌரவ பிரதமர் அவர்கள் அதனை உடனடியாக தடை செய்திருந்தார். இருந்த போதிலும் பிரதமரின் கட்டளையைக்கூட கவனத்திற் கொள்ளாமல் சில அதிகாரிகள் தற்பொழுது மீண்டும் தாம் நினைத்தவாறே செயற்பட முயற்சிக்கின்றனர். இதன் காரணமாகவே இதுவரை சாய்ந்தமருதிலுள்ள மாகாண அலுவலகத்திற்கான பெயர்ப்பலகை கூட காட்சிப்படுத்தப்படாமல் மறைக்கப்பட்டு வருகிறது. இது சம்பந்தமாக நாம் மாகாணப் பணிப்பாளரின் கவனத்திற்கு பலமுறை தெரியப்படுத்தியும் அது தொடர்பாக அவர் இதுவரை எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்பதையிட்டு இளைஞர்களாகிய நாம் பெரும் வருத்தமடைவதுடன், இளைஞர்களுக்கான அலுவலகத்தில் இளைஞர்களின் கோரிக்கை கவனத்திற் கொள்ளப்படுவதில்லை என்பதையிட்டும் கவலையடைகினுறோம்.

ஆகவே இவ் விடயங்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனத் தலைவர், அமைச்சர் பிரதமர் மற்றும் ஜனாதிபதி போன்றோரின் கவனத்திற்கு கொண்டு வந்து அவர்களூடாக உரிய கட்டளை விடுக்கப்பட்டுள்ளது அம்பாறைக்கு தற்காலிகமாக கொண்டு செல்லப்பட்ட கணக்குப் பிரிவினை மீண்டும் சாய்ந்தமருதிலுள்ள அதன் உத்தியோகபூர்வ அலுவலகத்திற்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வேண்டும்.

சாய்ந்தமருதிலுள்ள இவ் அலுவலகக் கட்டிடம் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்திற்கே சொந்தமானது என்பதும், கிழக்கிலுள்ள மூன்று மாவட்டங்களையும் சேர்ந்த மூவின இளைஞர்களின் இளைஞர் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கான பொருத்தமான இடமாகவும் திகழ்கிறது என்பதும் எதிர்காலத்தில் இளைஞர் சமூகத்திடையே பிரிவினைகளையும், இன நல்லுறவையும் சீர்குலைக்கும் மேற்படி தவறான நடவடிக்கைகளையும் தவிர்க்கும் வகையில் சாய்ந்தமருதிலுள்ள மாகாண அலுவலகம் எவ்வித தங்கு தடைகளுமின்றி, வேறுபாடுகளுமின்றி தொடர்ந்து சிறப்பாக இயங்கும் வகையில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து இளைஞர்கள் சார்பிலும் மிக வினயமாக வேண்டிக் கொள்கிறோம் .இதுவிடயமாக ஜனாதிபதி மற்றும் இளைஞர் விவாகார மற்றும் விளையாட்டு அமைச்சருக்கு கடிதம் அனுப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

-ஃபாரூக் சிஹான்-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சாணக்கியனுக்கு பதவி உயர்வு

east tamil

குகதாசன் கண்டனம்

east tamil

திருகோணமலையின் புதிய அரசாங்க அதிபராக மீண்டும் சிங்களவர் நியமனம்

east tamil

தொடரும் திருகோணமலை நகரை தூய்மைப்படுத்தும் சிறப்பு வேலைத்திட்டம்

east tamil

அம்பாறையில் நல்லிணக்கத்தின் தேசிய தரவுகளைப் பகிரும் பயிற்சி பட்டறை

east tamil

Leave a Comment