கிழக்கு உக்ரைனிய நகரமாக பக்முட்டை ரஷ்ய வீரர்கள் மெதுவாக நெருங்கி வருகின்றனர்.
கடந்த மாதத்தில் பெரும்பாலான சண்டைகள் தெற்கு உக்ரைனின் கெர்சன் பிராந்தியத்தில் வெளிப்பட்டாலும், தற்போது பக்முட்டைச் சுற்றி போர் சூடுபிடித்துள்ளது.
கடந்த மாதங்களில் போர்க்களத்தில் ரஷ்யப் படைகள் எதிர்கொண்ட பின்னடைவுகளை தொடர்ந்து, போர்க்கள வெற்றியொன்றை ஜனாதிபதி விளாடிமிர் புடின் எதிர்பார்ப்பதாக தெரிகிறது.
பக்முட்டை ரஷ்யப் படைகள் கைப்பற்றினால், உக்ரைனின் பிராந்திய விநியோக கோடுகளை சீர்குலைக்கும்.
டொனெட்ஸ்க் மாகாணத்தில் உள்ள முக்கிய உக்ரைனிய கோட்டைகளான கிராமடோர்ஸ்க் மற்றும் ஸ்லோவியன்ஸ்க் ஆகியவற்றை நோக்கி ரஷ்யப் படைகள் நகர்வதற்கான பாதையைத் திறக்கும்.
ரஷ்ய சார்பு பிரிவினைவாதிகள் டொனெட்ஸ்க் மற்றும் அண்டை மாகாணமான லுஹான்ஸ்க் மாகாணத்தின் சில பகுதிகளை 2014 முதல் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
“ரஷ்யர்கள் மெதுவான முன்னேறி வருகிறார்கள். ஆனால் அவர்கள் இன்னும் பக்முட் நகரிற்குள் நுழையவில்லை” என்று சர்வதேச ஊடக செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
ரஷ்ய இராணுவ நிறுவனமான வாக்னர் குழுமத்தைச் சேர்ந்த கூலிப்படையினர் இதற்கு தலைமை தாங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெப்ரவரி 24 அன்று உக்ரைன் மீது ரஷ்யா முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்குவதற்கு முன்பு, ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளின் சுய-பிரகடனக் குடியரசுகளின் சுதந்திரத்தை புடின் அங்கீகரித்தார். கடந்த மாதம், ரஷ்யப் படைகள் ஆக்கிரமித்த அல்லது பெரும்பாலும் ஆக்கிரமித்த டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க் மற்றும் இரண்டு மாகாணங்களை ரஷ்யா சட்டவிரோதமாக இணைத்தது.
ரஷ்யா ஐந்து மாதங்களுக்கும் மேலாக பாக்முத் மீது ரொக்கெட்டுகளை ஏவி தாக்கி வருகிறது. ஜூலை மாதம் லுஹான்ஸ்கில் இருந்து உக்ரைனிய துருப்புக்கள் விரட்டப்பட்ட பின்னர், தரைவழித் தாக்குதல் துரிதப்படுத்தப்பட்டது. ரஷ்யப் படைகள் இப்போது நகரின் புறநகரில் உள்ளன.
பக்முட் மீதான ரஷ்யாவின் நீண்டகால ரொக்கட் தாக்குதல் மாஸ்கோவின் “பைத்தியக்காரத்தனத்தை” அம்பலப்படுத்துகிறது என்று உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இந்த வாரம் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் கூறினார்.
“நாளுக்கு நாள், பல மாதங்களாக, அவர்கள் அங்குள்ள மக்களை அவர்களின் மரணத்திற்குத் தள்ளுகிறார்கள், பீரங்கித் தாக்குதல்களின் அதிகபட்ச சக்தியை அங்கே குவித்து வருகின்றனர்” என்று ஜெலென்ஸ்கி கூறினார்.
உள்ளூர் அதிகாரிகளின் கூற்றுப்படி, புதன்கிழமை முதல் வியாழன் வரை ஷெல் தாக்குதலில் குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டனர். டொனெட்ஸ்க் பகுதியில் வியாழன் மற்றும் வெள்ளிக்கு இடையில் மேலும் நான்கு பேர் இறந்தனர், ரஷ்ய துருப்புக்கள் பாக்முட் மற்றும் தெற்கே 90 கிமீ (55 மைல்) தொலைவில் உள்ள அவ்திவ்கா மீது தாக்குதல்களை நடத்தியதாக மாகாணத்தின் உக்ரைனிய ஆளுநர் தெரிவித்தார்.
இப்பகுதி தீவிர போர்க்களமாக மாறியுள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருவதாக கவர்னர் பாவ்லோ கிரிலென்கோ தெரிவித்தார்.
“பிராந்தியத்தில் இருக்கும் பொதுமக்கள் வெப்பம் மற்றும் மின்சாரம் இல்லாமல் தொடர்ந்து பயத்தில் வாழ்கின்றனர்” என்று கைரிலென்கோ தொலைக்காட்சி கருத்துக்களில் கூறினார்.
“நம்மைச் சுற்றியுள்ள எல்லா இடங்களிலும் அழிவின் அறிகுறிகள் உள்ளன,” என்று பெய்க் கூறினார். “நகரத்திலும் மின்சாரம் இல்லை, நாங்கள் தொடர்ந்து போரையும் இந்த சண்டையையும் கேட்கிறோம்.”
“ஏற்கனவே பலர் வெளியேறிவிட்டனர்,” என்று அவர் கூறினார், மற்றவர்கள் பாதாள அறைகளில் தஞ்சம் புகுந்துள்ளனர் என்றார்.