காதலர்களை வீடொன்றில் அடைத்து வைக்கப்பட்டதுடன், காதலனை கட்டி வைத்து விட்டு காதலியை கூட்டாக பாலியல் வல்லுறவிற்குள்ளாகக்ப்பட்டு வீடியோ எடுக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது.
போதைப்பொருள் கொடுக்கல் வாங்கலினால் இந்த விபரீதம் இடம்பெற்றது.
கொழும்பு புளூமெண்டல் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.
கேரகல பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர், கொழும்பில் உள்ள போதைப்பொருள் வியாபாரியின் வாடிக்கையாளர் என கூறப்படுகிறது. கொழும்பு வியாபாரியிடம் போதைப்பொருளை வாங்கி விற்பனை செய்து வந்துள்ளார்.
கொழும்பு வியாபாரியிடம் வாங்கிய போதைப்பொருளிற்கான பணத்தை செலுத்தாமல், அவருடனான வர்த்தகத்தை கேரகல இளைஞன் நிறுத்திக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் பெறுமதி சுமார் 3 இலட்சம் ரூபாவாகும்.
இதனால் ஆத்திரமடைந்த கொழும்பு வர்த்தகர், கேரகல இளைஞனை பழிவாங்க திட்டமிட்டு, ஒரு சூழ்ச்சி செய்துள்ளார்.
இளைஞனை தொடர்பு கொண்டு, மேலும் போதைப்பொருள் உள்ளதாகவும், அதை வந்து எடுத்துச் செல்லுமாறும் கூறியுள்ளார்.
இதை நம்பிய இளைஞன், தனது காதலியுடன் கொழும்பிலுள்ள போதைப்பொருள் வியாபாரியிடம் சென்றுள்ளார்.
அவர்களை துறைமுகத்திற்கு அண்மையிலுள்ள வீடொன்றில் அடைத்து வைத்து, பணத்தை கேட்டுள்ளனர்.
காதலனை கட்டி வைத்து விட்டு, அவரது கண்முன்பாகவே காதலியை கூட்டாக பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கியுள்ளனர். அதனை வீடியோவாக பதிவும் செய்தனர். பெண்ணொருவரே வீடியோ பதிவு செய்துள்ளார்.
பின்னர் இளைஞனின் தாயாரிற்கு தொலைபேசி அழைப்பேற்படுத்தி, மகனை போதைப்பொருள் வழக்கில் சிக்க வைக்காமலிருப்பதெனில் உடனடியாக 3 இலட்சம் ரூபாவை வங்கியில் வைப்பிலிடுமாறு மிரட்டியுள்ளனர்.
குடும்பத்தினர் பொலிசாரிற்கு அறிவித்ததை தொடர்ந்து, கொழும்பு துறைமுகத்திற்கு அண்மையிலுள்ள வீட்டை புளூமெண்டல் பொலிஸார் சுற்றிவளைத்தனர்.
போதைப்பொருள் விற்பனையாளர் உட்பட 10 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபர்களில் இரண்டு பெண்களும் உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.