மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆனைக்கோட்டை பகுதியில் 35கோழிகள் விசம் வைத்து கொல்லப்பட்டுள்ளன.
தனது வயலிற்குள் கோழிகள் புகுந்ததாக குறிப்பிட்டு, வயல் உரிமையாளரே விசம் வைத்து கொன்றதாக பிரதேசவாசிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆனைக்கோட்டை பகுதியில் உள்ள வயல் நிலமொன்றிற்குள் புகுந்த தமது 35 கோழிகள் சோற்றில் விசம் வைத்து கொல்லப்பட்டதாக, 3 குடும்பங்கள் குற்றம்சாட்டியுள்ளன.
வயல் நிலப்பகுதியில் ஆங்காங்கே கோழிகள் இறந்த நிலையில் காணபடபட்டன.
வயல் உரிமையாளரே கோழிகளிற்கு விசம் வைத்ததாக குறிப்பிட்டு, வயல் எல்லை வேலிகள் பிரதேச வாசிகளால் தீயிடப்பட்டுள்ளது.
அந்த வயல் உரிமையாளர் மானிப்பாய் பிரதேச சபையில் ஊழியராக பணிபுரிகின்றார் என அறியமுடிகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1