கொழும்பு வைத்தியசாலையில் ஹெலிகொப்டரில் அழைத்து வரப்பட்ட பிரமுகருக்கு சிகிச்சை!

Date:

இன்று (28) காலை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு விசேட பாதுகாப்புடன் ஹெலிகொப்டரில் பிரமுகர் ஒருவர் அழைத்து வரப்பட்டு, அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விசேட பிரமுகர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு நோயாளர் ஒருவரை வைத்தியசாலையில் அனுமதிக்கும் போது கடைப்பிடிக்கும் நடைமுறைகளுக்கு அப்பால் எவ்வித பதிவுகளையும் குறிப்புகளையும் வைத்திருக்காமல் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வைத்தியர்களை நாடாமல் வேறு வேறு விசேட வைத்தியர்கள் குழுவொன்று பல்வேறு வைத்தியசாலைகளில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வைத்தியசாலை வளாகத்தில் பாதுகாப்பு அதிகாரிகளை வைத்து விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் கடற்படைத் தளபதியே இவ்வாறு சிகிச்சை பெற்று வருவது தெரியவந்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

நாளை நாடு தழுவிய வேலைநிறுத்தம்!

நாடளாவிய ரீதியில் நாளை (30.11.2026) முன்னெடுக்கப்படவுள்ள தொழிற்சங்கப் போராட்டங்களுக்கு மத்தியிலும், பொதுமக்களுக்கான...

முடிவுக்கு வரவுள்ள உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் : அமைச்சர் அறிவிப்பு

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளை விரைவில் நிறைவு...

1983 கறுப்பு ஜூலை வன்முறைகள் தொடர்பில் விரிவான ஆய்வு – விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழு நியமனம்!

1983 ஜூலை மாதத்தில் இலங்கை முழுவதும் பரவிய கறுப்பு ஜூலை வன்முறைகள்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்