லேடி ரிட்வே மருத்துவமனையில் மின்சாரக் கட்டணம் செலுத்தாத காரணத்தால், மருத்துவமனையின் பல பிரிவுகளுக்கான மின் இணைப்பை மின்சாரசபையினர் புதன்கிழமை துண்டித்ததால் ஊழியர்கள் மற்றும் நோயாளிகள் சிரமப்பட்டனர்.
லேடி ரிட்வே மருத்துவமனைக்கு மாதாந்தம் 8 மில்லியன் முதல் 9 மில்லியன் ரூபா வரை மின்சாரக் கட்டணம் ஏற்படுகிறது.
ஆனால், மின் கட்டணம் செலுத்தாததால் சிற்றுண்டிச்சாலை உள்ளிட்ட பல இடங்களில் புதன்கிழமை மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
எவ்வாறாயினும், மின்சாரம் துண்டிக்கப்பட்டவுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவித்ததன் பின்னர் ரூபா 8 மில்லியன் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1