யாழ்ப்பாணம், வடமராட்சி கொற்றாவத்தை பகுதியில் இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.
மன்னார் மாவட்ட செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக பணிபுரியும் சீனித்தம்பி சுதர்சன் (32) என்பவரே தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
நேற்று தனது வீட்டில் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
இவரது தாயார் கடந்த வருடம் உயிரிழந்திருந்தார். அவரது முதலாவது ஆண்டு நினைவு சில நாட்களில் வரவுள்ள நிலையில், இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.
நேற்று அலுவலகத்திருந்து விடுமுறை பெற்று வீடு வந்தவர், ஒரு தொகைப்பணத்தை சகோதரர்களிற்கு பகிர்ந்தளித்துள்ளதாகவும், அதன்போது 5000 ரூபா பணத்தாள் ஒன்று தவறி விழுந்ததாகவும், உறவினர் ஒருவர் அதை எடுத்து கொடுத்த போது, அந்த பணத்தை சாப்பாட்டிற்கு பயன்படுத்துமாறு கூறி, வாங்க மறுத்ததாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.
நேற்று அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார். மரணத்திற்கு யாரும் காரணமில்லையென்று குறிப்பிட்ட கடிதமொன்றை எழுதி வைத்துவிட்டே உயிரிழந்துள்ளார்.