25.4 C
Jaffna
December 27, 2024
Pagetamil
உலகம்

ஈரான் மசூதியில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் தாக்குதல்

தெற்கு ஈரானிய நகரமான ஷிராஸில் உள்ள ஷியா மத வழிபாட்டுத் தலத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டனர். 40 பேர் காயமடைந்துள்ளனர் என்று நாட்டின் அரசு ஊடக நிறுவனமான IRNA தெரிவித்துள்ளது.

புதன்கிழமை மாலை ஷா செராக் மசூதிக்குள் ஆயுதம் ஏந்திய மூன்று நபர்கள் நுழைந்து தாக்குதல் நடத்தியதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதல் நடத்தியவர்களில் இருவர் பிடிபட்டுள்ளனர், ஒருவர் இன்னும் தப்பியோடியுள்ளார்.

ஐஎஸ்ஐஎல்  பயங்கரவாத அமைப்பு தங்கள் டெலிகிராம் சனலில் வெளியிட்ட அறிக்கையில் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.

ஈரானிய அரசுடன் தொடர்புடைய ஒரு ஊடகமான நூர் நியூஸ், தாக்குதல் நடத்தியவர்கள் ஈரானிய பிரஜைகள் அல்ல என்று முன்னர் செய்தி வெளியிட்டிருந்தது.

ஷிராஸில் கொல்லப்பட்டவர்களில் ஒரு பெண்ணும் இரண்டு குழந்தைகளும் அடங்குவதாக ஃபார்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

“நாங்கள் பிரார்த்தனைக்குத் தயாராகிக் கொண்டிருந்தோம்.  துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது, நாங்கள் மறுபக்கத்திலிருந்து தப்பிக்க முயற்சித்தோம், பின்னர் எனக்கு இரத்தப்போக்கு ஏற்பட்டது என்பதை உணர்ந்தேன்” என்று தாக்குதலில் உயிர் பிழைத்த ஒருவர் ஊடகங்களிடம் கூறினார்.

“யார் சுடுகிறார்கள் என்று என்னால் பார்க்க முடியவில்லை … அது தெருவில் இருந்து தொடங்கியது, பின்னர் அவர்கள் மசூதியை நோக்கி வந்தனர், அவர்கள் எதிர்ப்ட்டவர்களை சுட்டுக் கொன்றனர். சிலர் காயமடைந்து கொல்லப்பட்டதை நான் பார்த்தேன், ஆனால் தாக்குதல் நடத்தியவர்களை நான் பார்க்கவில்லை,” என்றார்.

ஷிராஸ் புனித யாத்திரைகள் மற்றும் சுற்றுலாவிற்கு பிரபலமான இடமாகும். கடந்த ஏப்ரல் 2008 இல், மசூதியில் வெடிகுண்டு வெடித்ததில் 14 பேர் கொல்லப்பட்டனர். தற்போது மீண்டும் அங்கு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பரில் “முறையற்ற ஹிஜாப்” அணிந்ததற்காக நாட்டின் அறநெறிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பின்னர் 22 வயதான மஹ்சா அமினி கொல்லப்பட்ட பின்னர், நாடு முழுவதும் எதிர்ப்பு போராட்டங்கள் இடம்பெறுகையில் புதன்கிழமை தாக்குதல் நடந்துள்ளது.

ஈரானின் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, ஷிராஸில் நடந்த தாக்குதலுக்கு பதிலளிக்கப்படாமல் விடமாட்டோம் என சூளுரைத்தார்.

“ஈரானின் எதிரிகள், நாட்டின் ஐக்கிய அணிகளில் பிளவை ஏற்படுத்தத் தவறிய பிறகு, வன்முறை மற்றும் பயங்கரவாதத்தின் மூலம் பழிவாங்குகிறார்கள் என்பதை அனுபவம் காட்டுகிறது. இந்த தீமை நிச்சயமாக பதிலளிக்கப்படாமல் போகாது. தாக்குதலை வடிவமைத்தவர்களுக்கு பாதுகாப்பு மற்றும் சட்ட அமலாக்க அமைப்புகள் பாடம் கற்பிக்கும், ”என்று ரைசி கூறினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஆப்கானிஸ்தானுக்குள் திடீர் வான் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்

Pagetamil

பறவை மோதியதால் விபரீதமா?: பயணிகள் விமானம் விபத்து; ஏராளமானவர்கள் பலி!

Pagetamil

ஜனாதிபதியாக இருந்தால்தான் கணவன்: சிரியாவிலிருந்து தப்பியோடிய ஆசாத்திடமிருந்து விவாகரத்து கோரும் மனைவி!

Pagetamil

உகண்டாவை உலுக்கும் டிங்கா டிங்கா வைரஸ்: இந்த வைரஸ் தொற்றினால் தொடர்ந்து நடனமாடிக் கொண்டேயிருப்பீர்கள்!

Pagetamil

நேபாளத்தை உலுக்கிய நிலநடுக்கம்!

east tamil

Leave a Comment