27.5 C
Jaffna
December 25, 2024
Pagetamil
உலகம்

அமெரிக்க, இஸ்ரேல் தலைவர்கள் ஈரான் ட்ரோன்கள் பற்றி கலந்துரையாடல்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் மற்றும் இஸ்ரேலின் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் புதன்கிழமை வெள்ளை மாளிகையில் சந்தித்து பேசினர். இதன்போது, ஈரான் விவகாரம், ரஷ்யாவின் ஈரான் வழங்கிய போர் ட்ரோன்களால் உக்ரைனுக்கு அதிகரித்து வரும் அச்சுறுத்தலைப் பற்றியும் விவாதித்தனர்.

இஸ்ரேலை உக்ரைனிற்னு உதவ அழுத்தம் கொடுக்கும் அமெரிக்காவின் நகர்வாக இது கருதப்படுகிறது.

ஈரானின் அணுசக்தித் திட்டம், கடுமையான ஈரானிய மதச் சட்டங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யும் எதிர்ப்பாளர்களை நசுக்குவது மற்றும் ரஷ்யாவிற்கு  ட்ரோன் விற்பனை விவகாரம் பற்றி அவர்கள் “முக்கியமாக” விவாதித்ததாக ஹெர்சாக் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் கூறினார்.

ஆயுதங்கள் “அப்பாவி உக்ரைனிய குடிமக்களை கொல்கின்றன” என்று ஹெர்சாக் கூறினார்.

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பிற்கு எதிராக மேற்கு நாடுகள் அணிதிரண்டுள்ள போதிலும், அமெரிக்க தலைமையிலான இந்த கூட்டணியில் இஸ்ரேல் முழுமையாக இணைய தயங்குகிறது.

ஆனால் ஹெர்சாக்கின் அமெரிக்க பயணம், மோதலில் ஈரானின் வளர்ந்து வரும் பங்கைப் பற்றிய இஸ்ரேலிய கவலையை அடிக்கோடிட்டுக் காட்டியது.

உக்ரலனிய சிவிலியன் இலக்குகளுக்கு எதிராக ரஷ்யா பயன்படுத்தும் கொடிய ட்ரோன்களின் ஈரான் வழங்கியதாக குற்றம் சாட்டிய ஹெர்சாக் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கனைச் சந்தித்து, ஈரான் ரஷ்யர்களுக்கு இராணுவ ட்ரோன்களை வழங்குவதை நிரூபிக்க உளவுத்துறை தகவல்களை பகிர்ந்து கொள்வதாக அறிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஜனாதிபதியாக இருந்தால்தான் கணவன்: சிரியாவிலிருந்து தப்பியோடிய ஆசாத்திடமிருந்து விவாகரத்து கோரும் மனைவி!

Pagetamil

உகண்டாவை உலுக்கும் டிங்கா டிங்கா வைரஸ்: இந்த வைரஸ் தொற்றினால் தொடர்ந்து நடனமாடிக் கொண்டேயிருப்பீர்கள்!

Pagetamil

நேபாளத்தை உலுக்கிய நிலநடுக்கம்!

east tamil

பிரான்ஸை உலுக்கிய பாலியல் வல்லுறவு வழக்கு: சொந்த மனைவியை கொடூரமான பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கிய கணவன், 50 ஆண்களுக்கு சிறைத்தண்டனை!

Pagetamil

துரோகம் செய்த காதலி கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுக்கத் தேவையில்லை: காதலனுக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு!

Pagetamil

Leave a Comment