புற்றுநோயை உண்டாக்கும் இரசாயனம் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, தனது தயாரிப்புகளான டவ் ட்ரை மற்றும் டவ் ஷம்போவை யுனிலீவர் நிறுவனம் திரும்ப பெற்றது.
இது குறித்து அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியான அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த 2021ம் ஆண்டு ஒக்ரோபர் மாதத்திற்கு முன்பு தனது தயாரிப்புகளில் புற்றுநோயை விளைவிக்கும் பென்சீன் கலந்துவிட்டதாகக் கூறி அவற்றை திரும்பப் பெறுவதாக, அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது
நெக்சஸ், சாவே, ட்ரெஸ்ஸமே, டிகி மற்றும் ஏரோஸார் ட்ரை ஷம்போ ஆகியனவற்றை அமெரிக்க சந்தைகளில் இருந்து திரும்பப்பெறுவதாக அறிவித்துள்ளது என கூறப்பட்டுள்ளது.
உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் (FDA) இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, நெக்ஸஸ், சுவேவ், ட்ரெசெம்மே மற்றும் டிகி ஆகியவை திரும்பப் பெறப்பட்ட சில பிராண்டுகளாகும்.
இது குறித்து யூனிலீவர் கூறியதாவது “பென்சீன் மனித புற்றுநோயாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. உள்ளிழுப்பதன் மூலமும், வாய்வழியாக, மற்றும் தோல் வழியாகவும் பென்சீன் உடலுக்குள் நுழையலாம். இது லுகேமியா மற்றும் எலும்பு மஜ்ஜையின் இரத்த புற்றுநோய் மற்றும் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் இரத்தக் கோளாறுகள் உள்ளிட்ட புற்றுநோய்களை ஏற்படுத்தும். பென்சீன் சுற்றுச்சூழலில் எங்கும் காணப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள மனிதர்கள் பல மூலங்களிலிருந்து உட்புறத்திலும் வெளிப்புறத்திலும் தினசரி வெளிப்பாடுகளைக் கொண்டுள்ளனர்.
பரிசோதனையில் கண்டறியப்பட்ட அளவுகளில் திரும்பப்பெறப்பட்ட தயாரிப்புகளில் பென்சீன் தினசரி வெளிப்பாடு மோசமான உடல்நல விளைவுகளை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படாது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட காலமாகவே அழகு சாதனப் பொருட்களின் ஆபத்துகளைப் பற்றியும், பென்சீன் நம் உடலில் கலந்தால் நமக்கு இரத்தப் புற்றுநோய் அல்லது ரத்தம் சம்பந்தப்பட்ட பிற புற்றுநோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
யுனிலீவரின் இந்த மீளப்பெறலை தவிர, ஜோன்சன் அண்ட் ஜோன்சன், நியூட்ரோஜீனா, எட்ஜ்வெல் பெர்சனல் கேர் நிறுவனத்தின் பனானா போட், ஓல்ட் ஸ்பைஸ் உள்ளிட்ட பொருட்கள் பலவும் கடந்த 18 மாதங்களில் திரும்பப் பெறப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
உலர் ஷம்போகள் என்றால் என்ன?
தண்ணீர் தேவையில்லாமல் முடியின் எண்ணெய் தன்மையை குறைக்கும் ஒரு வகை ஷம்போ.
இது தூள் வடிவில் உள்ளது மற்றும் பொதுவாக ஏரோசல் கேனில் இருந்து நிர்வகிக்கப்படுகிறது.
உலர் ஷாம்பு பெரும்பாலும் சோள மாவு அல்லது அரிசி மாவுச்சத்தை அடிப்படையாகக் கொண்டது.