இலங்கைக்கான அமெரிக்க துணைத் தூதர் டக் சோனெக் இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.
யாழ்ப்பாணம் வலி வடக்கு மயிலிட்டி துறைமுகத்துக்கு சென்ற அவர், துறைமுக அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பொருளாதார நிலைமை தொடர்பிலும் கேட்டு அறிந்து கொண்டார்.
அத்துடன் தற்போது ஏற்பட்டுள்ள மண்ணெண்ணெய் பிரச்சினை மீனவர்கள் எதிர்கொள்கிற முக்கிய பிரச்சினையாக காணப்படுகின்றது தொடர்பில் , இதன்போது அவர் மீனவர்களிடம் கேட்டு அறிந்து கொண்டார்.
அத்துடன் மயிலிட்டி கிராம அபிவிருத்தி சங்கத்துக்கு சென்ற அவர், அங்கு மீள்குடியேற்ற குழுவினரை சந்தித்து கலந்துரையாடினர்.
இதன்போது காணிகள் விடுவிக்கப்படாமை தொடர்பிலும் பொதுமக்களுடன் காணிகள் அதி உயர் பாதுகாப்பு வலையத்தில் இருக்கின்றது தொடர்பிலும் அவருக்கு வலிவடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சுகிர்தன் தெளிவு படுத்தினர்.
இது தொடர்பில் அவர் தான் ஜனாதியுடன் பேசி ஒரு நல்லதொரு முடிவினை பெற்று தருவதாக கூறியுள்ளார்