25.4 C
Jaffna
February 6, 2025
Pagetamil
குற்றம்

பொறியியலாளரை கொன்றுவிட்டு வேலைக்காரன் ஆடிய நாடகம்; அவரும் தற்கொலை!

மெல்சிறிபுரவில் உள்ள வீடொன்றில் இருந்து பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு சடலங்கள் இலங்கையில் பிறந்து தற்போது அமெரிக்க பிரஜையான சிவில் பொறியியலாளர் மற்றும் அவரது வேலைக்காரரின் சடலமென அடையாளம் காணப்பட்டுள்ளது.

வீட்டின் உரிமையாளரான சிவில் இன்ஜினியரைக் வேலைக்காரனே கொன்றுவிிட்டு, தான் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

சித்ரஞான ஜயரத்ன என்ற 70 வயதுடைய சிவில் பொறியியலாளர் ஒருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.

ஜயரத்னவின் சடலம் அவர் வசித்த தோட்டத்தில் புதைக்கப்பட்டிருந்ததை பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.

சிவில் இன்ஜினியர் சுமார் 30 அல்லது 40 வருடங்களாக அமெரிக்காவில் வசிப்பவர் என்பதும் அவர் ஒரு அமெரிக்க பிரஜை என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. சிவில் பொறியியலாளர் சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்னர் இலங்கைக்கு வந்து தனது பூர்வீக வீட்டில் வசிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மிலிந்த ருக்ஷான் பெரேரா என்ற நபர் அண்மையில் அவரது வீட்டில் வேலைக்காரராக வந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடந்த 08 ஆம் திகதி மெல்சிறிபுர பொலிஸ் நிலையத்திற்கு வந்த வேலைக்காரன், ​​வீட்டின் உரிமையாளரான சிவில் பொறியியலாளர் கடந்த 01 ஆம் திகதி அனுராதபுரத்திற்குச் சென்றதாகவும் அவர் திரும்பி வரவில்லை எனவும் முறைப்பாடு செய்திருந்தார்.

சிவில் இன்ஜினியரின் மொபைல் போன் கூட சுவிட்ச் ஓஃப் செய்யப்பட்டிருந்தது என்று அவர் போலீசாரிடம் கூறினார்.

இந்த முறைப்பாட்டின் பேரில் மேல்சிறிபுர காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், குறித்த ஊழியரிடம் அவ்வப்போது விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, ஞாயிற்றுக்கிழமை (23) வேலைக்காரன் வீட்டின் சமையலறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவரது மரணத்துடன், அவர் திருட்டு மற்றும் கொள்ளைகளில் ஈடுபட்டதாக காவல்துறைக்கு தகவல் வரத் தொடங்கியது.

தோட்டத்தை ஆய்வு செய்த போது, ​​வாழை மரத்துக்கு அருகில் புதிதாக தோண்டப்பட்ட இடம் காணப்பட்டது. காணாமல் போனதாக கூறப்படும் சிவில் பொறியியலாளர் சடலம் அங்கு புதைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வீட்டுக்குச் சொந்தமான சிவில் என்ஜினீயரை கொலை செய்துவிட்டு, அது வெளியில் வந்துவிடும் என்று நினைத்து அந்த வேலைக்காரன் தன் உயிரை மாய்த்துக்கொண்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ராகமவில் கொடூர கொலை

east tamil

குடும்பத் தகராறின் காரணமாக மனைவி கொடூர கொலை!

east tamil

அம்பலாந்தோட்டையில் மூவர் வெட்டிக் கொலை

east tamil

மாதம்பையில் கத்திக்குத்து தாக்குதல் – ஆண் உயிரிழப்பு, பெண் படுகாயம்

east tamil

கடித்துக் குதறிய கணவன்; மனைவிக்கு உதட்டில் 16 தையல்கள்

east tamil

Leave a Comment