Pagetamil
இலங்கை

பொதுமன்னிப்பளிக்கப்பட்ட மூவர் சந்திரிகா கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டவர்கள்: விடுதலையின் முன் சந்திரிகாவின் சம்மதமும் பெறப்பட்டது!

இலங்கையின் அரசியலமைப்பின் 34 வது பிரிவின்படி, இலங்கை நீதிமன்றத்தால் தண்டனை பெற்ற ஒருவருக்கு பொதுமன்னிப்பு வழங்குவது தொடர்பாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின்படி எட்டு தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார்.

இதன்படி, மன்னிப்பு வழங்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளில் மூவர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை படுகொலை செய்ய முயற்சித்ததாக குற்றம் சுமத்தப்பட்டவர்களாவர்.

இந்தக் கைதிகளை விடுவிக்கும் நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு முன்னர், ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுடன் கலந்துரையாடி, அவரின் சம்மதத்தைப் பெற்றதன் பின்னர், அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் பல தடவைகள் இடம்பெற்ற கலந்துரையாடலின் பலனாக இந்த கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இவர்கள் விடுவிக்கப்படுவதற்கு முன்னர் ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில் பாதுகாப்பு அமைச்சின் தலையீட்டின் பேரில் இவர்களிடம் ஆரம்பகட்ட விசாரணை நடத்தப்பட்டது. ஒப்புதல் அறிக்கை குறித்து நீதி அமைச்சர் மற்றும் அவர் மூலமாக சட்டமா அதிபருடன் கலந்தாலோசித்த பின்னரே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

இதன்படி, கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடைய நான்கு அரசியல் கைதிகளும் தண்டனை குறைக்கப்பட்டதை அடுத்து விடுதலை செய்யப்பட்டனர்.

அமைப்புடன் தொடர்புடைய இரண்டு தமிழ் விடுதலைப் புலிகள் கைதிகள் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்திருந்த வழக்குகள் வாபஸ் பெறப்பட்டு மேலும் இரண்டு தமிழ் அரசியல் கைதிகள் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விரைவில் விடுதலை செய்யப்பட உள்ளனர்.

விடுவிக்கப்பட்டவர்களில் மூன்று கைதிகளுக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு 22 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்தவர்கள், 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு 14 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த ஒரு கைதி,
10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு 14 ஆசிறைவாசம் அனுபவித்த ஒரு கைதி,
ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட இரண்டு கைதிகள், ஆனால் 14 ஆண்டுகள் சிறையில் உள்ளனர். 19 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு இதுவரை 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த மற்றொரு நபர் ஜனாதிபதி மன்னிப்பு பெற்றவர்களில் அடங்குவர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வறுமை கல்விக்கு தடையாக அமையக்கூடாது – வடக்கு ஆளுநர்

east tamil

வடமேல் மாகாணத்தில் விசேட குற்றத்தடுப்பு பிரிவு – ஆனந்த விஜேபால

east tamil

2025ல் முதல் 15 நாட்களில் 65 வீதி விபத்துக்கள் – 68 பேர் உயிரிழப்பு

east tamil

இ-டிக்கெட் மோசடி- பொலிஸ் அதிகாரி சேவையிலிருந்து இடைநிறுத்தம்

east tamil

கிளிநொச்சி நீர் சுத்திகரிப்பு பணிகளை பார்வையிட்ட அமைச்சர்

Pagetamil

Leave a Comment