மலையகப் புகையிரத பாதையில் ஹட்டன் புகையிரத நிலையத்தை அண்மித்த புகையிரதப் பாதையில் இன்று (24) காலை பாரிய குப்பை மேடு சரிந்து விழுந்ததாக ஹட்டன் புகையிரத நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
ஹட்டன் மற்றும் கொட்டகலை ஆகிய புகையிரத நிலையங்களுக்கு இடையில் ஹட்டன் புகையிரத நிலையத்திற்கு அருகாமையிலேயே இந்த குப்பைகள் அடங்கிய மண் மேடு சரிந்து வீழ்ந்ததன் காரணமாக நானு ஓயிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த சரக்கு புகையிரதம் மண் மேட்டில் மோதி இவ்வாறு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டது.
புகையிரத பாதையில் இடிந்து விழுந்த குப்பை மேட்டை புகையிரத பராமரிப்பு பணியாளர்கள் அகற்றியதன் பின்னர், (24) காலை 08.30 மணியளவில் மலையக புகையிரத சேவை மீண்டும் வழமைக்கு கொண்டுவரப்பட்டமை குறிப்பிடதக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1