அலியாவத்தை அசித என்ற நபரை சுட்டுக் கொன்ற நபர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை கழற்றிக் கொண்டிருந்த மூவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
தற்போது பிரான்சில் உள்ள சக்திவாய்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரான பிரன்ஷா ரூபன் கொடுத்த ஒப்பந்தத்தின்படி இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது.
மூன்று பேரும் மோட்டார் சைக்கிளின் உதிரிபாகங்களை பிரித்து விற்பனை செய்ய திட்டமிட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களும் பிரன்ஷா ரூபன் மற்றும் டுபாயில் வசிக்கும் மற்றுமொரு போதைப்பொருள் கடத்தல்காரரான கசுன் ஆகியோரின் கூட்டாளிகள் என பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.
சந்தேக நபர்கள் விசாரணையின் போது, ரூபன் மற்றும் கசுன் ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் மோட்டார் சைக்கிளை பிரித்ததாக தெரிவித்துள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1