சீன ஜனாதிபதியான சி ஜின்பிங் 3வது முறையும் தொடர்வது உறுதியானது!

Date:

சீன ஜனாதிபதி சி ஜின்பிங் (Xi Jinping) சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைச் செயலாளராக அடுத்த ஐந்தாண்டுகளுக்கு நீடிக்கவுள்ளார். 3வது முறையாக அவர் இந்த பொறுப்பிற்கு தெரிவாகியுள்ளார்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் (CCP) மத்தியக் குழு ஞாயிற்றுக்கிழமை அதன் பொதுச் செயலாளராக சி ஜின்பிங்கை ஐந்தாண்டு காலத்திற்கு தெரிந்தெடுத்ததாக அறிவித்தது.

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறும் அரசாங்கத்தின் வருடாந்திர சட்டமன்ற அமர்வுகளின் போது முறையாக அறிவிக்கப்படுவார். அவர் சீனாவின் ஜனாதிபதியாக மூன்றாவது முறையாகப் நீடிக்கப் போவது இப்போது உறுதியாகிவிட்டது.

சீனாவில் ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் கட்சி மாநாடு நேற்று (22) நிறைவடைந்தது.

ஏழு பேர் கொண்ட சக்தி வாய்ந்த உச்சமன்றத்தில் யார் அங்கம் வகிப்பார்கள் என்பதுதான் முக்கியக் கேள்வியாக இருந்தது.

ஷங்ஹாய் நகரில் கட்சித் தலைவராக முன்னர் செயல்பட்ட லி சியாங் கட்சியின் இரண்டாவது உயரிய பதவிக்கு உயர்வு பெற்றுள்ளார்.

அவர் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் பிரதமராக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் லீ கச்சியாங்கும் 68 வயதை எட்டிய மூத்த தலைவர்கள் பலரும் ஓய்வு பெற்றனர்.

மாவோ சேதுங்கிற்குப் பிறகு நாட்டின் மிகவும் செல்வாக்கு மிக்க ஆட்சியாளராக சி ஜின்பிங் தனது இடத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

செம்மணியில் இன்று மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளின் விபரம்!

யாழ்ப்பாணம் - செம்மணி - அரியாலை சித்துபாத்தி இந்து மயான மனிதப்...

18 மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, புதிய 18 மேல் நீதிமன்ற நீதிபதிகளை நியமித்துள்ளார். அவர்களுக்கான...

சடலம் மீட்பு

உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடொன்றின் இரண்டாம் மாடியில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்