ரி20 உலகக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணியை 5 விக்கெட்டுக்களால் இங்கிலாந்து வீழ்த்தியது.
பேர்த்தில் நடந்த இன்றைய ஆட்டத்தில், நாணயச்சுழற்சியில் வென்ற இங்கிலாந்து களத்தடுப்பை தெரிவு செய்தது.
முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி, இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் சீட்டுக்கட்டு போல சரிந்தது. 19.4 ஓவர்களில் 112 ஓட்டங்களிற்கு ஆட்டமிழந்தது.
இப்ராஹிம் சட்ரன் 32 ஓட்டங்களை பெற்றார்.
பந்து வீச்சில் சாம் கரன் 3.4 ஓவர்கள் வீசி 10 ஓட்டங்களை கொடுத்து 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
பதிலளித்து ஆடிய இங்கிலாந்து 18.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 113 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது.
இங்கிலாந்து தரப்பில் லிவிங்ஸ்டன் 29 ஓட்டங்களை பெற்றார்.
ஆட்டநாயகன் சாம் கரன்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1