26.3 C
Jaffna
December 20, 2024
Pagetamil
இலங்கை

ரணிலா? மஹிந்தவா?: ஆதரவாளர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்திய அமைச்சர் பிரசன்ன!

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க  எடுக்கப்படவுள்ள அரசியல் நிலைப்பாடு தொடர்பில் மினுவாங்கொடை உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களிடம் இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் அரசியல் செயற்குழுவில் மினுவாங்கொடை உள்ளூராட்சி மன்றம் மற்றும் நகர சபையின் தலைவர்கள் உட்பட அவரது பிரதான ஆதரவாளர்கள் 50 பேர் உள்ளனர்.

அமைச்சர் ரணதுங்க முக்கியமான அரசியல் தீர்மானங்கள் எடுப்பதற்கு முன்னர் இந்தக் குழுவுடன் ஆலோசனை நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

2015 ஆம் ஆண்டு நல்லாட்சி ஏற்பட்ட சமயத்தில், பிரசன்ன ரணதுங்க தனது அரசியல் முடிவு குறித்து இந்த குழுவிடம் ஆலோசனை கேட்டிருந்தார். மஹிந்த ராஜபக்ச தரப்பை வெளிப்படையாக ஆதரிப்பதற்கு முன், இந்த ஆதரவாளர்களின் கருத்தை கேட்டிருந்தார்.

மினுவாங்கொடை மபொடல பிரதேசத்தில் அமைந்துள்ள ரணதுங்கவின் உறவினர் ஒருவருக்கு சொந்தமான விழா மண்டபத்தில் நேற்று முன்தினம் (20) இரவு இந்த இரகசிய வாக்கெடுப்பு இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வருகை தந்த அனைத்து அரசியல்குழு உறுப்பினர்களுக்கும் இரண்டு கேள்விகள் கேட்கப்பட்ட வாக்குச் சீட்டு வழங்கப்பட்டது. நாட்டின் பொருளாதார நெருக்கடியைத் தீர்க்கும் சவாலை ஏற்றுக்கொண்ட தலைவரைத் தொடர்வது பொருத்தமானதா அல்லது இதுவரை இருந்த அரசியல் நிலைப்பாட்டில் பணியாற்றுவது பொருத்தமானதா என்பதுதான் அந்த இரண்டு கேள்விகள்.

உறுப்பினர்களின் வாக்கெடுப்புக்குப் பிறகு முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. தற்போது வெளிநாட்டில் இருக்கும் அமைச்சருக்கு முடிவு தெரிவிக்கப்படும் என அவர்களிற்க்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய அரசாங்கத்தின் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் திரு.பிரசன்ன ரணதுங்க ஆளுங்கட்சியின் பிரதான அமைப்பாளராகவும் உள்ளார்.

அவர் தற்போது தனிப்பட்ட பயணமாக பிரான்ஸ் சென்றுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழில் எலிக்காய்ச்சலால் 121 பேர் பாதிப்பு

Pagetamil

கடற்றொழிலாளர் விடயத்தில் மனிதாபிமான அணுகுமுறை என்றால் என்ன?: டக்ளஸ் கேள்வி!

Pagetamil

முன்னாள் ஜனாதிபதிவின் நன்கொடை

east tamil

எலிக்காய்ச்சலால் வளர்ப்பு மிருகங்களும் பாதிக்கப்படலாம்!

Pagetamil

முள்ளிவாய்க்காலில் 103 ரோஹிங்கியா அகதிகளுடன் கரையொதுங்கிய படகு!

east tamil

Leave a Comment