மன்னார் கீரி பகுதியில் அமைந்துள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் தங்கி இருந்து பாடசாலை சென்று வரும் மாணவர்களை ஏற்றி இறக்கும் சிறுவர் இல்லத்திற்கு சொந்தமான பேருந்து ஒன்றின் எரிபொருள் தாங்கியில் இருந்து சுமார் 40 லீற்றர் டீசல் இன்றைய தினம்(21) வெள்ளிக்கிழமை மாலை திருடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக குறித்த சிறுவர் இல்ல நிர்வாகத்தினர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
-குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,,
-மன்னார் கீரி கிராமத்தில் அன்பு சகோதரர் இல்லம் அமைந்துள்ளது.குறித்த சிறுவர் இல்லத்தில் உள்ள சிறுவர்கள் மன்னார் நகரில் உள்ள பாடசாலையில் கல்வி கற்று வருகின்றனர்.
குறித்த சிறுவர்களை பாடசாலைக்கு ஏற்றி இறக்கும் நடவடிக்கைகளுக்காக குறித்த இல்லத்தில் உள்ள பேருந்து ஒன்று பயன்படுத்தப்பட்டு வருகிறது.
-இந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை(21) காலை குறித்த சிறுவர் இல்லத்தில் உள்ள மாணவர்கள் ஏற்றப்பட்டு,மன்னார் நகரில் உள்ள பாடசாலையில் இறக்கி விடப்பட்டனர்.
பின்னர் மீண்டும் அவர்களை ஏற்றிச் செல்வதற்காக மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் குறித்த பேருந்து நிறுத்தப்பட்டிருந்தது.
-இதன் போது இன்று வெள்ளிக்கிழமை(21) மதியம் 2.15 மணி அளவில் இனம் தெரியாத நபர்களினால் குறித்த பேரூந்தின் எரிபொருள் தாங்கி க்கு போடப்படும் பூட்டு உடைக்கப்பட்டு சுமார் 40 லீற்றர் டீசல் திருடப்பட்டுள்ளது.
-பாடசாலை முடிந்து மாணவர்களை ஏற்றிச் செல்ல முயன்ற போது குறித்த சம்பவம் தெரியவந்துள்ளது.குறித்த சம்பவம் தொடர்பாக நிர்வாகத்தினர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
குறித்த சிறுவர் இல்லம் மன்னார் கீரி பகுதியில் சுமார் 20 வருடங்களுக்கு மேலாக இயங்கி வருவதோடு,தேவையுடைய,வரிய மாணவர்களை தங்க வைத்து அவர்களின் கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.