28.3 C
Jaffna
December 12, 2024
Pagetamil
முக்கியச் செய்திகள்

22A: இரண்டாவது வாசிப்பு இன்று!

அரசியலமைப்பின் 22வது திருத்தத்தின் இரண்டாம் வாசிப்பு இன்று பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த சட்டமூலம் மீதான விவாதம் இன்றும் நாளையும் நாடாளுமன்றத்தில் நடைபெற உள்ளது.

பாராளுமன்றத்தில் நாளை மாலை 5.30 மணியளவில் அரசியலமைப்பின் 22வது திருத்தத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் முடிவில் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

இதற்கிடையில், ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உத்தேச சட்டமூலத்தில் உள்ள பல சரத்துக்களை எதிர்த்துள்ளது. ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைக்க முன்மொழியும் சட்டமூலத்தை பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கீகரிக்க விரும்பவில்லை என்றால் அரசாங்கம் அதை திரும்பப் பெறலாம்.

அரசியலமைப்பின் 22 வது திருத்தச் சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதன் பின்னர் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவினால் ஓகஸ்ட் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

19வது அரசியலமைப்புத் திருத்தத்தில் உள்ளடங்கிய முற்போக்கான சரத்துக்களை மீண்டும் இயற்றும் அதே வேளையில் 20வது திருத்தத்தை ரத்து செய்வதை இந்த சட்டமூலம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதன்படி, அரசியலமைப்பு சபையின் அமைப்பில் மாற்றங்கள், இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் அரசுப் பதவிகளில் இருப்பதைக் கட்டுப்படுத்துதல், அமைச்சரவை அமைச்சர்களை நியமிப்பதற்கான புதிய வழிமுறை உள்ளிட்டவை புதிய அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் முன்மொழியப்பட்டுள்ளன.

அரசியலமைப்பின் 22 வது திருத்தச் சட்டத்தை முன்வைப்பது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகளின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமராக இருந்தபோது பல கலந்துரையாடல்களை நடத்தினார்.

இதற்கிடையில், அரசியலமைப்பின் 22 வது திருத்தத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்பின் சரத்துக்களுக்கு முரணானது என்று உயர் நீதிமன்றம் தீர்மானித்தது.

பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மை மற்றும் பொது வாக்கெடுப்பின் பின்னரே 22 வது அரசியலமைப்பு திருத்தத்தின் சில சரத்துக்களை நிறைவேற்ற முடியும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு அனுப்பப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

எவ்வாறாயினும், மேற்படி சரத்துகள் திருத்தப்பட்டால், பொது வாக்கெடுப்பு இல்லாமலேயே பாராளுமன்றம் திருத்தத்தை நிறைவேற்ற முடியும் என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

நீதியமைச்சரால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அரசியலமைப்பின் 22 வது திருத்தச் சட்ட வரைவுக்கு எதிராக உயர் நீதிமன்றில் ஒன்பது மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழில் தொடர் உயிரிழப்புக்களுக்கு எலிக்காய்ச்சலே காரணம்: பரிசோதனையில் உறுதியானது!

Pagetamil

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர்கள் ஒதுங்கி, புதியவர்களுக்கு வழிவிட யோசனை: புதிய அணிகள் இணைய பேச்சு!

Pagetamil

சிரியா முன்னாள் ஜனாதிபதி அசாத் பற்றிய மர்மம் விலகியது: ரஷ்யா புகலிடம் அளித்துள்ளது!

Pagetamil

சிரியா தலைநகரும் கிளர்ச்சியாளர்களிடம் வீழ்ந்தது: அசாத் குடும்பத்தின் 50 ஆண்டுகால ஆட்சி முடிந்தது!

Pagetamil

திருத்தப்பட்ட அரசி விலைகள் அறிவிப்பு!

Pagetamil

Leave a Comment