Pagetamil
இலங்கை

கிராம அலுவலர், சமூர்த்தி உத்தியோகத்தருக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என வலியுறுத்தி கல்மடுநகரில் மக்கள் போராட்டம்

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவின் கல்மடுநகர் மக்கள் இன்று
காலை 10 மணியளவில் கிராம அலுவலர் அலுவலகத்திற்கு முன் போராட்டம் ஒன்றை
முன்னெடுத்திருந்தனர்.

தங்கள் கிராமத்தின் கிராம அலுவலர் மற்றும் சமூர்த்தி உத்தியோகத்தரின்
கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என்றும் இடமாற்றம் செய்ய
வேண்டாம் எனவும், அரசியல் தரப்பு ஒன்றின் தேவையற்ற அரசியல் தலையீடுகள்
தவிர்க்கப்படல் வேண்டும் என்றும் வலியுறுத்தியே பொது மக்கள் இப் போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.

நூற்றுக்கணக்கான பொது மக்கள் ஒன்றுதிரண்டு எங்களுடைய அதிகாரிகள்
எங்களுக்கு வேண்டும், நேர்மையாக செயற்படும் அதிகாகரிகளுக்கு மன உளைச்சலை
ஏற்படுத்தாதே, உங்களின் சுயநலன்களுக்காக அதிகாரிகளின் சுதந்ததிரத்தில்
தலையிடாதே, அரசியல் நோக்கங்களுக்காக அதிகாரிகளை அசௌகரியங்களுக்கு
உள்ளாக்காதே, மக்கள் சேவையாளர்களின் மனங்களை நோகடிக்காதே போன்ற
வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்தனர்.அத்தோடு 200 க்கு
மேற்பட்டவர்கள் ஒப்பம் இட்டு பிரதேச செயலாளாருக்கு மகஐர் ஒன்றையும்
கையளித்திருந்திருந்தனர்.

கடந்தவாரம் குறித்த அலுவலர்களுக்கு எதிராக எமது கிராமத்தைச் சேர்ந்த
சிலர் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். இவர்கள் கிராம அலுவலர்
மற்றும் சமூர்த்தி உத்தியோகத்தர் ஊழல் செய்கின்றனர் என்றும், நேர்மையாக
செயற்படவில்லை என்றும் தெரிவித்திருநதனர். ஆனால் அக்கருத்து உண்மைக்கு
புறம்பானது இந்த இரு அலுவலர்களுக்கும் எங்கள் கிராமத்திற்காக நேரம் காலம்
பாராது நியாயமாக செயற்படுகின்றவர்கள். எனவே அதிகாரிகளின் நேர்மையான
செயற்பாடுகாரணமாக தங்களது சுயநலன்கள் பூர்த்தி செய்யப்படவில்லை என
கருதும் சிலர் இவர்களுக்கு எதிராக போராட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.
இதன்காரணமாகதான் பெரும்பாலான கிராம மக்களாகிய நாம் நேர்மையாக செயற்படும் அதிகாரிகள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக இப் போராட்டத்தை
முன்னெடுத்துள்ளோம் என போராட்டத்தில் கலந்துகொண்ட பொது மக்கள்
தெரிவித்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கனடா விவசாய ஆராய்ச்சியாளர் யாழில் திடீர் மரணம்

east tamil

வேங்கைவயல் சம்பவம் தனிப்பட்ட விரோதம்: தவறான தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம் – தமிழக அரசு வேண்டுகோள்

Pagetamil

அழிவடைந்ததாக கருதப்பட்ட வௌவால் இனம் 58 ஆண்டுகளின் பின் இலங்கையில் கண்டுபிடிப்பு!

Pagetamil

ஜனாதிபதி நிதியத்தின் புதிய திட்டம்

east tamil

தூக்கில் போடப்பட்ட நாய் – மாங்குளத்தில் பரபரப்பு

east tamil

Leave a Comment