மது போதையில் வேனை செலுத்தி, 36 வயது பெண்ணுக்கு மரணத்தை விளைவித்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட 19 வயதான இளைஞர் ஒருவரின் சாரதி அனுமதிப்பத்திரத்தை வாழ்நாள் முழுவதும் தடைசெய்து நீர்கொழும்பு நீதவான் சம்பிக்க ராஜபக்ஷ, இன்று (19) உத்தரவிட்டார்.
அத்துடன், 6 குற்றச்சாட்டுகளுக்கு 199,000 ரூபாய் அபராதம் விதித்த நீதவான், விபத்தில் மரணித்த பெண்ணின் பெற்றோர் மற்றும் கணவருக்கு 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறும் கட்டளையிட்டார்.
நீர்கொழும்பு, தலாதுவ வீதியில் 2021 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 1 ஆம் திகதி இடம்பெற்ற கோர விபத்து தொடர்பில் குற்றத்தை ஒப்புக்கொண்ட நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞருக்கே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1