25 C
Jaffna
January 30, 2025
Pagetamil
இலங்கை

உரிய காலத்தின் முன் பாராளுமன்றம் கலைக்கப்படாது!

குறித்த நேரத்திற்கு முன்னர் பாராளுமன்றம் கலைக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆளும் கட்சி உறுப்பினர்கள் கூட்டத்தில் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே, இரண்டரை வருடங்களின் பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்படுமா என எழுப்பப்பட்ட கேள்விக்கு கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு நேற்று முன்தினம் (17) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது.

இதனிடையே, இருபத்தி இரண்டாவது திருத்தத்திற்கு பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையினர் எதிர்ப்பு தெரிவிப்பதாக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

எனவே இருபத்தி இரண்டாவது திருத்தத்தை நிறைவேற்றினால் பொதுஜன பெரமுனவில் உள்ள அனைவரின் ஆதரவையும் பெற முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருபத்தி இரண்டாவது திருத்தம் காலத்தின் தேவை என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

அதனை ஏற்று நடத்துவதற்கு அனைவரது ஆதரவையும் எதிர்பார்க்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

விடைபெற்றுச்செல்லும் மாவை அண்ணைக்கு அஞ்சலி மரியாதை!

Pagetamil

மாவையின் மறைவுக்கு ஹிஸ்புல்லாஹ் இரங்கல்

Pagetamil

மாவையின் புகழுடலுக்கு தமிழரசு பதில் தலைவர் சீ.வீ.கே அஞ்சலி

Pagetamil

ஹெரோயினுடன் கைதான இருவர் பொலிஸாரிடமிருந்து தப்பியோட்டம்

east tamil

அரிசி இறக்குமதியை நிறுத்த அரசாங்கம் முடிவு

east tamil

Leave a Comment