27.9 C
Jaffna
February 7, 2025
Pagetamil
இந்தியா

ஆசிரியை ஏமாற்றியதால் மாணவன் தற்கொலை!

மாணவனை காதலித்து ஏமாற்றிய ஆசிரியை போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை அம்பத்தூரில் உள்ள உயர்நிலை பள்ளியில் 10ம் வகுப்பு ஆசிரியையாக வேலை பார்த்து வந்தவர் ஷர்மிளா. இவருக்கு 24 வயதாகிறது. பள்ளி முடிந்ததும் மாலையில் தனது வீட்டில் மாணவர்களுக்கு ஷர்மிளா டியூஷன் எடுத்து வந்தார். இங்கு கள்ளிக்குப்பத்தை சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவன் குமார் டியூஷன் படித்து வந்தார்.

குமாரிடம் ஆசிரியர் ஷர்மிளா நெருக்கம் காட்டியுள்ளார்.

மற்ற மாணவர்களை விட குமார் மீது அக்கறை காட்டி அன்பின் வலைக்குள் சிக்க வைத்துள்ளார். டியூஷன் முடிந்து வீட்டுக்கு சென்ற பிறகு குமாரிடம் ஷர்மிளா செல்போனில் பேசியும் வந்துள்ளார். இதனால் இருவருக்குள்ளும் நெருக்க்கம் அதிகமானது. இந்த உறவு நீண்ட நாட்களாக தொடர்ந்து வந்தது. டியூஷன் நேரத்தில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் மாணவனிடம் காதல் சிலுமிஷத்தில் ஷர்மிளா ஈடுபட்டுள்ளார். நெருக்கமாக புகைப்படங்களையும் எடுத்து வைத்துக்கொண்டனர். நள்ளிரவு வரை வாட்சப் சேட்டிங் சென்று கொண்டிருந்தது.

இந்த நிலையில் குமார் 12 ஆம் வகுப்பை முடித்துவிட்டு கல்லூரியில் சேருவதற்கு தயாராகி வந்தார். டியூஷன் வாழ்க்கை முடிந்ததும் இருவரது உறவு விரிசல் விட தொடங்கியது. இதற்கிடையே, சில மாதங்களுக்கு முன்பு, ஷர்மிளாவுக்கு, வேறு ஒருவருடன் நிச்சயார்த்தம் முடிந்தது.

இதனால் குமாருடனான காதலை ஷர்மிளா நிறுத்திக்கொண்டார். மேலும், குமாரிடம் நாம் பிரிந்து விடலாம் என்றும் இனிமேல் எனக்கு போன், மெசேஜ் செய்ய வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவன் ஷர்மிளாவை நேரில் சந்தித்து பேச முடிவு செய்து அதன்படி ஷர்மிளாவை வரவழைத்து பேசியுள்ளார். அப்போதும் ஷர்மிளா தனது முடிவில் உறுதியாக இருந்து குமாருக்கு அறிவுரை கூறிவிட்டு கிளம்பி விட்டதாக கூறப்படுகிறது.

அன்று முதல் மன விரக்தியில் யாரிடமும் பேசாமல் இருந்து வந்த குமார் சம்பவத்தன்று இரவு 10 மணியளவில் படுக்கை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். தகவல் அறிந்து வந்த அம்பத்தூர் போலீசார் குமாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து குமாரின் செல்போனை ஆய்வு செய்தபோது, ஷர்மிளாவுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள், அந்தரங்க ஆடியோ பதிவுகள் ஆகியவை கிடைத்தன. அதனை வைத்து ஷர்மிளாவிடம் விசாரித்ததில் அவர் குமாரை காதலித்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஷர்மிளாவை போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

டிரம்ப்க்கு எதிராக காங்கிரஸ் கட்சி இந்தியாவில் ஆர்ப்பாட்டம்

east tamil

குழந்தைக்குள்ளே குழந்தை

east tamil

மூன்று ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமைக்குள்ளான மாணவி

east tamil

உணவு முடிந்ததால் திருமணத்தை நிறுத்தி மாப்பிள்ளை வீட்டார்: பொலிஸ் நிலையத்தில் நடந்த திருமணம்!

Pagetamil

“மக்களுக்கான அரசியலை முன்வைத்து…” – தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜுனா பதிவு

Pagetamil

Leave a Comment