மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட ஓட்டமாவடிக் கோட்டத்திலுள்ள மீராவோடை உதுமான் வித்தியாலயத்தில் ஆக்கத்திறன் கண்காட்சி வெள்ளிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மீராவோடை உதுமான் வித்தியாலய அதிபர் எம்.பி.முபாறக் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் பணிப்பாளர் டாக்டர் எஸ்.எம்.எம்.எஸ்.உமர் மௌலானா ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எல்.நௌபர் பிரதி கல்விப் பணிப்பாளர்களான திருமதி.எம்.ஜே.றிப்கா வீ.ரீ.அஜ்மீர் திருமதி.ஜே.தாஜூன் நிஸா ஆரம்பக்கல்வி வளவாளர் எம்.பி.நபீர் நூலகர் க.ருத்திரன் மட்டக்களப்பு மத்தி கல்வி வலய அதிகாரிகள் மற்றும் பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள் கல்வியலாளர்கள் பெற்றோர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இங்கு மீராவோடை பொது நூலகத்தின் நூலக சேவைப் பகுதி போக்குவரத்து பகுதி பாரம்பரிய உணவு பாரம்பரிய பொருட்கள் இஸ்லாமிய கலைக் கூடம் சித்திரக் கலைகள் உட்பட பாரம்பரியங்களை மீட்டுப் பார்க்கும் வகையில் கண்காட்சிக் கூடம் அமையப்பெற்றுள்ளது.
காலம் மாறி வரும் நிலையில் பாரம்பரிய உணவுகள் கலாசாரம் பொருட்கள் என்பன மருகி வரும் நிலையில் மாணவர்கள் முதல் தற்காலத்து சந்ததியினரின் பாரம்பரியவற்றை பார்க்கும் வகையிலும் பாரம்பரியம் அழியாத வகையிலும் கண்காட்சியில் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு காணப்பட்டது.
அத்தோடு அம்மியில் அரைத்தல் உரலில் அவல் குற்றும் பழக்கம் இல்லாது காணப்பட்ட நிலையில் அதனை முதியோர்கள் பயன்படுத்தி காட்டிய நிலையில் மாணவர்கள் முதல் பலர் அதனை பயன்படுத்தியதை அவதானிக்க முடிந்தது.
இதேவேளை தேசிய வாசிப்பு மாதம் ஓக்டோபர் 2022 ஜ முன்னிட்டு ‘அறிவார்ந்த சமூகத்திற்கான வாசிப்பு ‘ என்ற தலைப்பில் தேசிய நூலகத்தினால் பல்வேறு நூலக நிகழ்வுகள் நாட்டில் பல பாகத்திலும் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு நிகழ்வாக மிராவோடை பொது நூலகத்தினால் மாணவர்கள் மற்றும் வாசகர்களின் வாசிப்பு பழக்கத்தினை தூண்டும் விதமாக நடமாடும் நூலக சேவையும் மேற்படி ஆக்கத்திறன் கண்காட்சியில் நூலக உத்தியோகஸ்த்தர்களினால் காட்சிபடுத்தப்பட்டது.
இக்கண்காட்சி இன்று வெள்ளிக்கிழமை மற்றும் நாளை சனிக்கிழமை ஆகிய இரு தினங்களில் மாணவர்கள்இ பெற்றோர்கள் ஆகியோர் கண்காட்சியை பார்வையிடலாம் என வித்தியாலய அதிபர் எம்.பி.முபாறக் தெரிவித்தார்.