வரக்காபொலவில் மண் சரிவைத் தொடர்ந்து இடிபாடுகளுக்கு அடியில் இருந்து 24 வயதுடைய இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை அவரது தாயாரின் சடலமும் மீட்கப்பட்டது.
தேடுதல் நடவடிக்கையை அடுத்து 47 வயதுடைய பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
50 வயதுடைய தந்தை நேற்று இடிபாடுகளுக்கு அடியில் இருந்து மீட்கப்பட்டு வரக்காபொல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வரக்காபொல, கொஸ்வத்தை, தும்பலியத்த பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றின் மீது நேற்று மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் மூன்று பேர் காணாமல் போயிருந்தனர்.
பொலிசார் மற்றும் இலங்கை இராணுவத்தினர், அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
தன்படி, கடந்த சில நாட்களில் நாடு முழுவதும் 3 பேரிடர் தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளன.