பல்வேறு அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள். திரைப்பட தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட பலருடன் நெருங்கிப் பழகி, அவர்களுடன் உடலுறவு கொண்டு, இரகசியமாக வீடியோ பதிவு செய்து, மிரட்டி பணம் பறிக்கும் இளம் பெண்ணும், கணவரும் கைது செய்யப்பட்டனர்.
அந்த பெண்ணின் வலையில் வீழ்ந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் சரியாக தெரியவில்லை. தற்போது வரை 30 இற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டது உறுதியாகியுள்ளது.
ஒடிசாவின் கலஹண்டி மாவட்டத்தில் உள்ள ஒரு ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த அர்ச்சனா நாக், இப்போது சொகுசு கார்கள், நான்கு உயர் இன நாய்கள் மற்றும் ஒரு வெள்ளை குதிரையுடன் ஒரு ஆடம்பரமான அரண்மனை வீட்டை வைத்திருக்கிறார்.
அவர் 4 ஆண்டுகளில் 30 கோடி குவித்து உள்ளதாக கூறப்படுகிறது.
அர்ச்சனா சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், சினிமா தயாரிப்பாளர்கள் என பிரபலமானவர்களைக் குறிவைத்து அவர்களுடன் நெருங்கி பழகி வந்துள்ளார்.
அவர்களுடன் தனியாக அறையிலிருந்தபோது அதை ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார்.
அர்ச்சனாவின் கணவர் ஜெகபந்தும் ஏழைக்குடும்பத்தை சேர்ந்தவர். ஹொட்டலில் பணிபுரிந்தவர். அர்ச்சனாவுடன் காதல் வசப்பட்டு, கல்யாணமான பின்னர் இப்போது கோடீஸ்வரர். அவரது குடும்பத்தினர் இன்னும் கிராமத்தில் ஓலைக் கொட்டிலில் வாழ்கிறார்கள்.
அர்ச்சனா மற்றும் அவரது கணவர் ஜெகபந்து சந்த் பல அரசியல்வாதிகள் மற்றும் செல்வாக்கு மிக்க நபர்களுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. சில அரசியல்வாதிகள் அர்ச்சனாவை அறிந்திருப்பதாக ஒப்புக்கொண்டனர், வேறு சிலர் எந்த தொடர்பையும் மறுத்தனர்.
அர்ச்சனாவும் அவரது கணவரும் செல்வாக்கு மிக்க நபர்களின் செக்ஸ் வீடியோக்களை பதிவு செய்து அவர்களை மிரட்டி பணம் சம்பாதித்தனர். இருப்பினும், திரைப்பட தயாரிப்பாளர் அக்ஷய் பரிஜாவை சிக்க வைக்கும் அவரது திட்டம் தோல்வியடைந்து, கைதாகியுள்ளனர்.
இந்த வழக்கில் இதுவரை, 18 எம்.எல்.ஏக்கள் உட்பட 30க்கும் மேற்பட்ட செல்வாக்கு மிக்க நபர்களை அர்ச்சனா ஹனிட்ராப் செய்தது தெரிய வந்துள்ளது.
பெரும்பாலான எம்எல்ஏக்கள் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜேடி அரசை சேர்ந்தவர்கள் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர்களில் 3 அமைச்சர்களும் உள்ளனர்.
எனினும், மாநிலத்தின் 80 அரசியல்வாதிகள் அர்ச்சனாவிடம் சிக்கியதாக, எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. அதனால்தான் அர்ச்சனாவை பாதுகாப்பதை போல மாநில அரசு நடப்பதாக குற்றம்சாட்டியுள்ளன.
அர்ச்சனா சிக்கிய கதை
ஒக்டோபர் 2ஆம் திகதி அர்ச்சனா மீது பெண் ஒருவர் கந்தகிரி போலீசில் புகார் அளித்துள்ளார். தன்னுடன் நட்பாக பழகிய அர்ச்சனாவிடம் அவர் சிக்கியதாக புகார்தாரர் கூறினார்.
வேலை தேடி மாநில தலைநகருக்கு வந்த புகார்தாரர் அர்ச்சனாவை 2018ல் சந்தித்தார். அதே கட்டிடத்தில் வாடகைக்கு வசித்ததால், இருவரும் நெருங்கி பழகி வந்தனர். பின்னர், செல்வாக்கு மிக்க நபர்களின் செக்ஸ் வீடியோக்களை பதிவு செய்து அவர்களை மிரட்டி சம்பாதிக்குமாறு அர்ச்சனா வற்புறுத்தினார். அர்ச்சனாவும் அவரது கணவர் ஜெகபந்துவும் புகார்தாரரை மது கலந்த குளிர்பானத்தை குடிக்க வைத்தனர், அதைத் தொடர்ந்து அவர் சுயநினைவை இழந்தார். புகார் அளித்தவர் சுயநினைவைப் பெற்றபோது, அவர் நிர்வாணமாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அப்போதுதான் அர்ச்சனாவும், அவரது கணவரும் அவரை பிளாக்மெயில் செய்ய ஆரம்பித்தனர்.
ஏப்ரல் மாதத்தில், அர்ச்சனா, பாதிக்கப்பட்ட பெண்ணிடம் திரைப்பட தயாரிப்பாளர் அக்ஷய் பரிஜாவின் எண்ணைக் கொடுத்து, அவருடன் அரட்டை அடிக்கத் தொடங்கினார். ஒரு நாள் பரிஜாவை அழைத்து அவருடன் உடல் உறவை ஏற்படுத்திக் கொள்ளும்படி கட்டாயப்படுத்தப்பட்டார். இருவரும் உல்லாசமாக இருந்த போது அர்ச்சனா பதிவு செய்தார். அதன்பிறகு அந்த யுவதியின் உதவியுடன் பரிஜாவை பிளாக்மெயில் செய்யத் தொடங்குவதற்கு முன்பு, யுவதி அளித்த முறைப்பாட்டினால் அர்ச்சனா சிக்கியுள்ளார்.