திருகோணமலை கந்தளாய் பிரதான வீதியின் கப்பல்துறை பகுதியில் சிறுத்தையொன்று வாகனம் ஒன்றில் மோதி இறந்துள்ளது.
இச்சம்பவம் நேற்று (10) காலை இடம்பெற்றுள்ளதாக வன ஜீவராசி பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சிறுத்தை வீதியைக் கடக்க முற்பட்ட போதே வாகனத்தில் மோதியிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
சிறுத்தையின் சடலத்தை பரிசோதித்து, பிரேத பரிசோதனைக்காக கிரித்தலை கால்நடை மருத்துவப் பிரிவிற்கு அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்தனர்.




