நீண்ட காலமாக யாழ் மாவட்டத்தில் போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த குறித்த நபர் நீண்ட காலமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் போலீசாரினால் தேடப்பட்டு வந்திருந்த நிலையில் நேற்று மாலை கோப்பாய் போலீஸ் பிரிவுக்குட்பட்ட கரந்தின் சந்தியில் வைத்து 5 கிராம் 400 மில்லிகிராம் ஹேரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
28 வயதுடைய கோப்பாய் செல்வபுரத்தைச் சேர்ந்த குறித்த நபர் நீண்ட காலமாக பொலிசாரால் தேடப்பட்டு வந்த நிலையில் நேற்றைய தினம் கோப்பாய் பொலிசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து குறித்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்டவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு இன்றைய தினம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட உள்ளதாக கோப்பாய் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
அதேவேளை கோப்பாய் போலீஸ் பிரிவுக்குட்பட்ட கல்வியங்காட்டு சந்திப் பகுதியில் 1 கிராம் 400 மில்லிகிராம் ஹேரோயின் போதைப் பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் நல்லூர் பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய இளைஞன் என தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்டவர் விசாரணைகளின் பின் நீதிமன்றத்தின் முட்படுத்தப்பட உள்ளார்,




