20ஐ ஆதரித்து விட்டு 22ஐ எப்படி ஆதரிப்பது?: சாகர காரியவசம்!

Date:

தனக்கு தெரிந்தவரையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் 22வது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களிக்க மாட்டார்கள் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்தார்.

சுயமரியாதையுடன் அந்த சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாட்டிற்கு பெரும் அழிவை ஏற்படுத்திய மற்றும் அராஜகத்திற்கு வழிவகுத்த 19 வது திருத்தத்தை மாற்றியமைக்க 20 வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்த ஒரு குழுவினர் 19 வது திருத்தத்தை மீண்டும் நல்லதென எவ்வாறு பிரகடனம் செய்ய முடியும் என சாகர காரியவசம் கேள்வி எழுப்பினார்.

22வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் மீதான விவாதம் எதிர்வரும் 20 மற்றும் 21ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. சட்டமூலம் மீதான இறுதி வாக்கெடுப்பு வரும் 21ஆம் திகதி பிற்பகல் நடைபெறும்.

spot_imgspot_img

More like this
Related

திருடச் சென்ற வீட்டில் குறட்டை விட்டு தூங்கிய திருடன்

ரத்தனபிட்டிய பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்த திருடன் ஒருவன், உள்ளே...

ஹோர்முஸைத் திறக்கும் திட்டம் குறித்து அமெரிக்காவின் பதில் செவ்வாய்க்கிழமை வரும் – ஈரான் வெளியுறவு அமைச்சர்

ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பது குறித்த தெஹ்ரானின் முன்மொழிவுக்கு, அமெரிக்காவிடமிருந்து செவ்வாய்க்கிழமையன்று அதிகாரப்பூர்வமான...

அரச வாகனத்தை பயன்படுத்திய வழக்கில் முன்னாள் அமைச்சர் பௌசிக்கு ரூ.66 இலட்சம் அபராதம்!

அனர்த்த முகாமைத்துவ அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், நெதர்லாந்து அரசாங்கத்தால் அனர்த்த முகாமைத்துவ...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்