பயிற்சி ஆட்டத்தில் சிம்பாவேயை வீழ்த்தியது இலங்கை

Date:

2022 ரி20 உலகக்கிண்ண போட்டிக்கான பயிற்சி ஆட்டத்தில் சிம்பாவே அணியை 33 ஓட்டங்களால் இலங்கை வீழ்த்தியது.

நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற சிம்பாவே கப்டன் கிரேக் எர்விக் களத்தடுப்பை தேர்வு செய்தார்.

முதலில் ஆடிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 188 ஓட்டங்களை பெற்றது.

அதிகபட்சமாக குசல் மெண்டிஸ் 29 பந்துகளில் 6 பவுண்டரிகள், 3 சிக்சர்களுடன் 54 ரன்கள் எடுத்தார். பதும் நிஸ்ஸங்க 21 ரன்கள் எடுத்தார்.

தொடக்க ஜோடி 57 ரன்கள் இணைப்பாட்டமாக பெற்றனர்.

இன்னிங்ஸின் பிற்பகுதியில், வனிந்து ஹசரங்க 14 பந்துகளில் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 37 ரன்கள் எடுத்தார்.

189 என்ற வெற்றி இலக்குடன் துடுப்பெடுத்தாடிய சிம்பாவே  5 விக்கெட் இழப்பிற்கு 155 ஓட்டங்களை பெற்றது.

அதிகபட்சமாக வெஸ்லி மாதேவெரே 43 ரன்கள் எடுத்தார்.

மில்டன் ஷும்பா 32 ரன்கள் எடுத்தார்.

இலங்கை சார்பாக, மஹீஷ் தீக்ஷன 44 ஓட்டங்களிற்கு 3 விக்கெட்டுக்களும், சாமிக்க கருணாரத்ன 26 ஓட்டங்களிற்கு 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

இலங்கையின் இரண்டாவது மற்றும் கடைசி பயிற்சி ஆட்டம் வியாழக்கிழமை மெல்போர்னில் உள்ள ஜங்ஷன் ஓவல் மைதானத்தில் அயர்லாந்துக்கு எதிராக இடம்பெறுகிறது.

இலங்கை நேரப்படி இரவு 9.30 மணிக்கு ஆட்டம் தொடங்க உள்ளது.

2014 உலகக் கோப்பை டி20 சாம்பியனான இலங்கை, ஒக்டோபர் 16ஆம் திகதி உலகக் கோப்பை தொடக்க ஆட்டத்தில் நமீபியாவை எதிர்கொள்கிறது.

குரூப் ஏ போட்டி இலங்கை நேரப்படி காலை 9.30 மணிக்கு ஜீலோங்கில் நடைபெற உள்ளது.

spot_imgspot_img

More like this
Related

‘நீதிபதி இடமாற்றத்துடன் எனக்கு தொடர்பேயில்லை’: மறுக்கிறார் ஆளுனர்!

யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதியின் இடமாற்றத்துக்கும், வடக்கு மாகாண ஆளுநருகும் எந்தவொரு...

அதிமுகவுக்கு குட்பை சொல்ல போகிறாரா சி.வி.சண்முகம்?

விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுகவின் முகமாக கால் நூற்றாண்டு காலமாக அடையாளப்படுத்தப்பட்டவர் சி.வி.சண்முகம்....

திருச்சியில் முதல்வர் விஜய்யை வரவேற்ற துரை வைகோ – ‘திமுக சின்னத்தில் போட்டியிட்டது துரதிர்ஷ்டம்’ என ஆதங்கம்

நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்காக திருச்சி விமானம் நிலையம் வந்த முதல்வர் விஜய்யை,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்