பிணைமுறி மோசடி வழக்கு: அர்ஜூன மகேந்திரன் விடுதலை!

Date:

2015ஆம் ஆண்டு மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடி குறித்து தாக்கல் செய்யப்பட்ட 1ஆவது பிணை முறி மோசடி வழக்கின் பொதுச் சொத்து சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டில் இருந்து, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் மற்றும் 9 பிரதிவாதிகளை விடுதலை செய்யுமாறு கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம், இன்று (11) கட்டளையிட்டது.

பொதுச் சொத்துகள் சட்டத்தின் கீழ் பிரிவாதிகளுக்கு சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டைப் பேண முடியாது என்று பிரதிவாதிகள் தரப்பால் முன்வைக்கப்பட்ட பூர்வாங்க ஆட்சேபனையை நீதிபதிகள் குழாம் ஏற்றுக் கொண்டதையடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

சஞ்சீவ மொராயஸ், தமித் தோட்டவத்த மற்றும் நாமல் பலேல்ல ஆகிய மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாமின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையான நீதிபதிகளின் உடன்பாட்டின் பேரில் இந்த தீர்மானம் அறிவிக்கப்பட்டது.

இலங்கை மத்திய வங்கியினால் நடாத்தப்பட்ட பிணைமுறி ஏலத்தின் போது 688 மில்லியன் ரூபா பெறுமதியான பத்திரங்கள் தொடர்பில் நம்பிக்கை மீறல் இடம்பெற்றதாக பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் Perpetual Treasuries லிமிடெட் நிறுவனத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டின் ஆரம்ப ஆட்சேபனையையும் நீதிமன்றம் இன்று ஏற்றுக்கொண்டது.

spot_imgspot_img

More like this
Related

இஸ்ரேலும் ஹிஸ்புல்லாவும் சண்டையை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளன: ட்ரம்ப்

இஸ்ரேலும் ஹிஸ்புல்லாவும் சண்டையை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்...

தானசாலை வரிசையில் நின்றவர்களை மோதிக்கொன்ற வாகன சாரதி மீது கொலைக்குற்றச்சாட்டு!

மீகொடவில் உள்ள வெசக் தானசாலையில் வரிசையில் நின்றிருந்த மக்கள் கூட்டத்தின் மீது...

‘நீதிபதி இடமாற்றத்துடன் எனக்கு தொடர்பேயில்லை’: மறுக்கிறார் ஆளுனர்!

யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதியின் இடமாற்றத்துக்கும், வடக்கு மாகாண ஆளுநருகும் எந்தவொரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்