விதிகளின்படிதான் இரட்டை குழந்தை பெற்றெடுத்தார்களா?: நயன்தாரா-விக்னேஷ் சிவனிடம் விளக்கம் கேட்க தமிழக அரசு முடிவு!

Date:

நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதி விதிகளுக்கு உட்பட்டு வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றார்களா என்று விளக்கம் கேட்கப்படும் என சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் கூறி உள்ளார்.

நயன்தாரா இரட்டை குழந்தை விவகாரம் பேசு பொருளாக மாறி உள்ள நிலையில், இந்தியாவில் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று கொள்ளும் முறை தடை செய்யப்பட்டுள்ளது.

வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றதில் விதிகளை மீறினார்களா விக்கி-நயன் தம்பதி என பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

திருமணமான 4 மாதங்களில் நயன்- விக்கி இரட்டை குழந்தைகள் எப்படி என கேள்விக்களை தொடுத்து வருகின்றனர்.

விதிகளை மீறி, வாடகை தாய் மூலம் நயன்தாரா குழந்தை பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதி விதிகளுக்கு உட்பட்டு வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றார்களா என்று விளக்கம் கேட்கப்படும் என சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் கூறி உள்ளார்.

இதுகுறித்து பேட்டி அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் வாடகை தாய் மூலம் விதிமுறைகளின் படிதான் குழந்தை பெற்றார்களா என விளக்கம் கேட்கப்படும்.பொது சுகாதாரத்துறையின் மருத்துவக்கல்லூரி இயக்குநரகம் சார்பில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதியிடம் விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

spot_imgspot_img

More like this
Related

‘நீதிபதி இடமாற்றத்துடன் எனக்கு தொடர்பேயில்லை’: மறுக்கிறார் ஆளுனர்!

யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதியின் இடமாற்றத்துக்கும், வடக்கு மாகாண ஆளுநருகும் எந்தவொரு...

அதிமுகவுக்கு குட்பை சொல்ல போகிறாரா சி.வி.சண்முகம்?

விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுகவின் முகமாக கால் நூற்றாண்டு காலமாக அடையாளப்படுத்தப்பட்டவர் சி.வி.சண்முகம்....

திருச்சியில் முதல்வர் விஜய்யை வரவேற்ற துரை வைகோ – ‘திமுக சின்னத்தில் போட்டியிட்டது துரதிர்ஷ்டம்’ என ஆதங்கம்

நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்காக திருச்சி விமானம் நிலையம் வந்த முதல்வர் விஜய்யை,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்