பேருந்து நிலையத்தில் மாணவிக்கு தாலி கட்டிய மாணவன்!

Date:

பேருந்து நிலையம் அருகே பன்னிரண்டாம் வகுப்பு மாணவிக்கு மாணவன் தாலி கட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சிதம்பரம் பேருந்து நிலையம் அருகில் காந்தி சிலை உள்ளது. அதன் அருகில் பல்வேறு சிறு கிராமங்களுக்கு செல்வதற்காக சிற்றுண்டி பேருந்து நிறுத்தம் உள்ளது. இந்த நிழற்குடையில் பள்ளி சீருடையில் இருக்கும் மாணவி ஒருவருக்கு மாணவன் ஒருவர் மஞ்சள் கயிறு மூலம் தாலி கட்டுகிறார்.

அந்த வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

சிதம்பரம் அருகே உள்ள பெராம்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட வெங்காய தலமேடு கிராமத்தைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிக்கே தாலி கட்டப்பட்டுள்ளது.

தாலி கட்டிய மாணவன் சிதம்பரம் அருகே உள்ள வடகரிராஜபுரம் கிராமத்தை சேர்ந்த அருண்குமார் தனியார் பாலிடெக்னிக் மாணவன் என்பதும் தெரிய வந்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

இஸ்ரேலும் ஹிஸ்புல்லாவும் சண்டையை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளன: ட்ரம்ப்

இஸ்ரேலும் ஹிஸ்புல்லாவும் சண்டையை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்...

தானசாலை வரிசையில் நின்றவர்களை மோதிக்கொன்ற வாகன சாரதி மீது கொலைக்குற்றச்சாட்டு!

மீகொடவில் உள்ள வெசக் தானசாலையில் வரிசையில் நின்றிருந்த மக்கள் கூட்டத்தின் மீது...

‘நீதிபதி இடமாற்றத்துடன் எனக்கு தொடர்பேயில்லை’: மறுக்கிறார் ஆளுனர்!

யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதியின் இடமாற்றத்துக்கும், வடக்கு மாகாண ஆளுநருகும் எந்தவொரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்