காலிமுகத்திடல் சம்பவம்: பொலிசாரின் நடத்தை பற்றி மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை!

Date:

நேற்று (9) காலிமுகத்திடலில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவினரை பொலிஸார் கலைத்த விதம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

போராட்டக்காரர்கள் கலைக்கப்பட்டதற்கான காரணங்களை விவரித்து 24 மணி நேரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஆணைக்குழு பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளது.

நேற்று மாலை காலிமுகத்திடலில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது 6 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மக்கள் போராட்டத்தின் போது உயிரிழந்த நபர்களை நினைவுகூரும் வகையில் இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

காலிமுகத்திடலை ஒட்டி மாலை 5.30 மணியளவில் போராட்டம் சட்டவிரோதமானது எனக் கூறி போராட்டத்தை கலைக்க பொலிஸார் முயற்சித்தனர்.

இதனையடுத்து ஏற்பட்ட கலவரத்தின் போது 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

குழந்தைகளுடன் இருந்தவர்களையும் பொலிசார் கைது செய்ய முயற்சித்த போது, குழந்தைகளும் பாதிக்கப்பட்டனர். குழந்தையொன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது.

பொலிஸாரின் அத்துமீறலை கண்டித்து சட்டத்தரணிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இன்று அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

spot_imgspot_img

More like this
Related

‘நீதிபதி இடமாற்றத்துடன் எனக்கு தொடர்பேயில்லை’: மறுக்கிறார் ஆளுனர்!

யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதியின் இடமாற்றத்துக்கும், வடக்கு மாகாண ஆளுநருகும் எந்தவொரு...

அதிமுகவுக்கு குட்பை சொல்ல போகிறாரா சி.வி.சண்முகம்?

விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுகவின் முகமாக கால் நூற்றாண்டு காலமாக அடையாளப்படுத்தப்பட்டவர் சி.வி.சண்முகம்....

திருச்சியில் முதல்வர் விஜய்யை வரவேற்ற துரை வைகோ – ‘திமுக சின்னத்தில் போட்டியிட்டது துரதிர்ஷ்டம்’ என ஆதங்கம்

நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்காக திருச்சி விமானம் நிலையம் வந்த முதல்வர் விஜய்யை,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்