‘ஆபரேஷன் மின்னல் ரவுடி வேட்டை’: 48 மணி நேரத்தில் 1310 ரவுடிகள் கைது

Date:

தமிழக காவல்துறையின் ஆபரேஷன் மின்னல் ரவுடி வேட்டையில் 48 மணி நேரத்தில் 1310 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆபரேஷன் மின்னல் ரவுடி வேட்டை தொடர்பாக டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்ட செய்திக் குறிப்பில், “ஆபரேஷன் மின்னல் ரவுடி வேட்டையில், முதல் 24 மணி நேரத்தில் தமிழகம் முழுவதும் 133 முக்கிய ரவுடிகள் பிடிபட்டனர். மேலும், பல ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த பிரபல ரவுடிகள் சிக்கினர்.

இதனைத் தொடர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் பலர் கைது செய்யப்பட்டனர். கடந்த 48 மணி நேரத்தில் 1310 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 221 ரவுடிகள் தலைமறைவு குற்றவாளிகள். 110 ரவுடிகள் மீது பிடியானை நிலுவையில் இருந்தது. இவர்கள் 331 பேரும் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டனர். மீதம் உள்ள 979 ரவுடிகள் மீது நன்னடத்தை உறுதிமொழி பெறப்பட்டது. இதை அவர்கள் மீறும் பட்சத்தில் கைது செய்யப்பட்டு 6 மாதம் சிறையில் அடைக்கபடுவார்கள்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

நாளை நாடு தழுவிய வேலைநிறுத்தம்!

நாடளாவிய ரீதியில் நாளை (30.11.2026) முன்னெடுக்கப்படவுள்ள தொழிற்சங்கப் போராட்டங்களுக்கு மத்தியிலும், பொதுமக்களுக்கான...

முடிவுக்கு வரவுள்ள உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் : அமைச்சர் அறிவிப்பு

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளை விரைவில் நிறைவு...

1983 கறுப்பு ஜூலை வன்முறைகள் தொடர்பில் விரிவான ஆய்வு – விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழு நியமனம்!

1983 ஜூலை மாதத்தில் இலங்கை முழுவதும் பரவிய கறுப்பு ஜூலை வன்முறைகள்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்